Monday, October 20, 2008

வோட்கா விளம்பரம் - ரெசிப்பி

சும்மா சொல்லக்கூடாதுங்க! இந்த மாதம் PIT-க்கு வந்த எல்லாப் படத்திலேயும் மக்கள் தூள் கிளப்பியிருந்தாங்க. அதனாலேயோ என்னவோ, போட்டியில் கலந்துகிட்ட நண்பர்களுக்கே சந்தேகம் சலங்கை கட்டி ஆட ஆரம்பிச்சிருச்சு:-)

இந்த மாத போட்டி அறிவிப்பு வந்த உடனேயே, நம்ம விளம்பர மாடல் மது பாட்டில்தான் என்று முடிவாகிருச்சு. இந்த வகை விளம்பரங்கள் அனைத்துமே diffused lighting பயன்படுத்தித்தான் எடுப்பாங்க, ஆனால் அந்த மாதிரி சமாச்சாரம் எதுவும் நம்ம கிட்ட இல்ல. என்ன பண்ணலாம்னு வலையில் மேய்ந்ததில் சில பயனுள்ள தகவல்கள் கிடைத்தது. கடைசியாக bounce lighting பயன்படுத்தலாம் என்று ஒரு வெள்ளை அட்டையை build-in flash-ற்கு முன்னால் 45 டிகிரி கோணத்தில் பிடித்து எடுத்ததால் lighting நன்றாகவே diffuse ஆகி வந்தது. அது மட்டும் இல்லாமல் அறையின் ஓர் மூலையில் படம் எடுத்ததால் சுவர்களில் ஒளி நன்றாக bounce ஆனது.

ஒரு மேசையை சுவற்றிலிருந்து 4 அடி தள்ளி நகர்த்தி, கறுப்பு நிற விரிப்பு விரித்து, அதன்மேல் ஒரு கண்ணாடி பலகையை வைத்து (அப்படித்தான் அனைத்துச்சாமான்களின் பிரதிபலிப்பு கீழே கிடைத்தது), மது பாட்டில், மார்ட்டினி க்ளாஸ், ஆரஞ்சு, செர்ரி, ஐஸ்கட்டிகள் எல்லாவற்றையும் நோக்கத்திற்கு பரப்பி வச்சாச்சு. கீழே இருக்கின்ற வரைபடத்தில் உள்ளதுபோல், கறுப்புப் பின்னணிக்கு இரண்டு கறுப்பு பனியன்களைத் தொங்கவிட்டாச்சு.



இப்பப் படம் எடுத்துப் பார்த்தா ஏதோ குறையிற மாதிரி ஒரு எண்ணம். அதனால் செர்ரிய மேலே இருந்து தூக்கிப்போட ஆள் தயார் செய்து தூக்கிப்போட சொல்லிகிட்டே இருக்கவேண்டியதுதான். நீங்க செர்ரி நீரைத்தொடும் கணத்தில் க்ளிக்கிகிட்டே இருக்க வேண்டியதுதான். Multiple Exposure கூட பயன்படுத்தலாம். என்ன ஒரு விசயம்னா, நமக்கு வேண்டிய நீர்த்தெறிப்பு முதல் ஷாட்டிலயும் வரலாம் இல்ல கொஞ்சம் நேரங்கழிச்சும் வரலாம். எனக்கு ஒரு 4 மணி நேரம் கிடைத்து வந்தது:-)

அதில் சில.



முதலில் வோட்கா என்றதும் அதன் நிறம் இல்லாத தன்மை நினைவிற்கு வந்ததால் வெள்ளைப் பின்னணியில் எடுக்கலாம் என்று ஆரம்பித்து கடைசியில் கறுப்புப் பின்னணியாகிவிட்டது. போட்டிக்கு அளித்த படம் எடுத்ததிலேயே கடைசி படம்.

வோட்கா என்றுமே என்னை கவர்ந்ததில்லை. அதற்குப் பல காரணங்கள். அதற்காக புதிதுபுதிதாக முயற்சி செய்வதற்கு அஞ்சுவதும் இல்லை:-) ஒரு வானொலி நிகழ்ச்சியில் இந்த வோட்காவைப் பற்றி கேள்விப்பட்டு வாங்கினேன். சும்மா சொல்லக்கூடாது. Greygoose-ஐ விட மிகச்சிறந்த வோட்கா இது என்பது என் கணிப்பு(இதையும் Greygooseதான் தயாரிக்கிறார்கள் என்று ஒரு வதந்தி உள்ளது). என்னைக்கேட்டால் 2 லார்ஜ் வோட்காவும் 4 ஐஸ்கட்டிகளுமே பொருத்தம் என்பேன். மத்தவங்க வேற மாதிரி முயற்சி செய்து மறக்காமல் பின்னூட்டத்தில் தெரிவிக்குமாறு வேண்டுகிறேன்:-)

Sunday, October 12, 2008

வோட்கா விளம்பரம் -
அக்டோபர் PIT போட்டிக்கு...



1. போட்டிக்கான படம்.



2. உங்கள் பார்வைக்கு...