Wednesday, May 14, 2008

ஜோடி ஜோடியாய்...
(PIT மே மாத போட்டிக்கு)

போட்டிக்கான படம்:
ஜோடி


ஒவ்வொரு நாளும் ஏதாவது ஜோடியா யோசித்து வைச்சு வெளியே போய் படம் எடுக்கலாம்-னு நினைச்சா, நம்ம "சுறுசுறுப்பு" அதுக்கு இடம் குடுக்கவே மாட்டேன் என்று அடம் பிடிக்குது:-).
அதனால, இந்த முறை வீட்டின் உள்ளேயே எடுத்த படம் இதோ உங்கள் பார்வைக்கு!!!

1. நீ முன்னாலே போனா, நான் பின்னாலே வாரேன் - காதல் ஜோடித்துளிகள்:-)



மேலே உள்ள படம் தலைப்பிற்கு பொருந்துமோ பொருந்தாதோ என்று, போன வருடம் வாஷிங்டன் D.C-ல எடுத்த, ஒரே ஜோடி மயமா இருந்த படம் இது.

2. ஜோடி ஜோடியாக...



ஆனால், இந்த மூன்றில் எதை அனுப்புவது என்று குழப்பமாக இருப்பதால், உங்களிடமே விட்டு விடுகிறேன். முதலாவதா அல்லது வேறயா? கொஞ்சம் சிரமம் பார்க்காம சொல்லிட்டு போங்க..பரிசு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் உங்கள் பொறுப்பு:-)

பின்குறிப்பு: தமிழ்மணத்தில் சரியாக தெரியாத காரணத்தால் மீண்டும் இணைக்கிறேன்.

Thursday, April 17, 2008

மலரே...

இந்த படத்தில் சிறப்பாகச் சொல்ல ஒன்றும் இல்லையென்றாலும் அதனுடைய பின்னணிக்காக எனக்கு மிகவும் பிடித்த படம்.
பின்னணி வேற ஒன்னும் இல்லீங்க. விஸ்வரூபம் எடுக்கும்முன் அமைதியாக அன்னநடை போட்டுச் செல்லும் நயாகரா ஆறுதான் out of Focus-ல்.



Monday, April 14, 2008

தனிமை தனிமையோ...
(PIT ஏப்ரல் மாத போட்டிக்கு)






நான் இங்கே நீயும் அங்கே
இந்த தனிமையில் நிமிஷங்கள் வருஷமானது ஏனோ
வான் அங்கே நீலம் இங்கே
இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானது ஏனோ
தனிமை தனிமையோ... கொடுமை கொடுமையோ...

(நியுயார்க் நகரம் பாடலின் வரிகள்..படம்: சில்லென்று ஒரு காதல்)


நான்கைந்து மாதங்களாக பார்த்த பின்பு "ஆஹா..தலைப்புகள் எல்லாம் ரொம்ப ஈஸியா இருக்கே! நாம்ம கூட கலந்துக்கலாம் போல இருக்கே!!!"-னு ஆசைப்பட்டு போன மாசம் கலந்துகிட்டதுக்கு.. இந்த மாசமே PIT குழு வச்சாங்க ஆப்பு... மத்தவங்களுக்கு எப்படியோ.."தனிமை" தலைப்பு நம்மளை கொஞ்சம் மண்டை காயவச்சதென்னவோ உண்மை...அதான் இவ்வளவு தாமதம்...இருந்தாலும் நல்ல தலைப்பு..

Friday, April 4, 2008

மற்றும் சில ஃப்ளமிங்கோ படங்கள்






Wednesday, April 2, 2008

ஃப்ளமிங்கோ



Wednesday, March 26, 2008

"S"



Friday, March 21, 2008

மயிலிறகே...

மயிலிறகே... மயிலிறகே... வருடுகிறாய் என்னை!!!