இந்த blog-ஐ ஆரம்பிக்கும்போது புகைப்படம் தவிர எதுவும் எழுதுவதில்லை என்ற முடிவோடு ஆரம்பித்தாலும், பல சமயங்களில் அந்த முடிவைப் போட்டுத்தாக்க வாய்ப்பு கிடைத்தாலும் அதை தவிர்த்தே வந்திருக்கிறேன்.
ஆனால் 5 நிமிடத்திற்கு முன் தொலைக்காட்சியில் பார்த்த அந்த நிகழ்வு மேலே குறிப்பிட்ட அந்த முடிவை மாற்றியது.
ஆம். A.R.ரஹ்மான் Golden Globe வாங்கிவிட்டார். மிக மிக மகிழ்ச்சி தந்த நிகழ்ச்சி அது. A.R.ரஹ்மானின் இசையில் பல இடங்களில் நான் முரண்பட்டிருந்தாலும், எனக்கு மிகவும் பிடித்த இரு ஹாலிவுட் இசை அமைப்பாளர்களையும்(Hans Zimmer மற்றும் James Newton Howard...)
ஓரங்கட்டி இந்த விருதை வாங்கி வந்ததை மிகவும் சிறப்பானதாகவே கருதுகிறேன்.
WELL DONE RAHMAN!!!
Sunday, January 11, 2009
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
மகிழ்ச்சி தரும் விஷயம். நாட்டுக்கும் நமக்கும் பெருமை.
புகைப்பட பதிவு மட்டுமே என்கிற உங்கள் உறுதியில் எங்களுக்கு இசைவில்லை. அழகாய் தலைப்பிட்டு அருமையாய் எழுதியிருக்கிறீர்கள் அமல்.
இனி வரும் பதிவுகள் படம் மட்டும் காட்டாமல் உங்கள் எண்ணங்களையும் வடிக்கட்டுமே:)!
//
ராமலக்ஷ்மி said...
மகிழ்ச்சி தரும் விஷயம். நாட்டுக்கும் நமக்கும் பெருமை.
//
உண்மைதான் ராமலக்ஷ்மி!!!
//
புகைப்பட பதிவு மட்டுமே என்கிற உங்கள் உறுதியில் எங்களுக்கு இசைவில்லை. அழகாய் தலைப்பிட்டு அருமையாய் எழுதியிருக்கிறீர்கள் அமல்.
இனி வரும் பதிவுகள் படம் மட்டும் காட்டாமல் உங்கள் எண்ணங்களையும் வடிக்கட்டுமே:)!
//
:-)
Post a Comment