Showing posts with label இயற்கை. Show all posts
Showing posts with label இயற்கை. Show all posts

Sunday, August 15, 2010

பச்சை நிறமே! பச்சை நிறமே!
ஆகஸ்ட் PIT 2010



Tuesday, July 20, 2010

தேவ மைந்தன்
ஜூலை PIT 2010




Tuesday, May 25, 2010

PIT குழுப்போட்டி
Los Colores De Orange -
வண்ணமிகு ஆரஞ்ச் மாவட்டம்




முந்தைய பதிவுகள் Slide-1, Slide-2, Slide-3.


Slide-4 : லகுணா கடற்கரை (Laguna Beach)








PIT குழுப்போட்டி
Los Colores De Orange -
வண்ணமிகு ஆரஞ்ச் மாவட்டம்



முந்தைய பதிவுகள் Slide-1, Slide-2.


Slide-3 : லகுணா கடற்கரை (Laguna Beach)









Thursday, May 6, 2010

அந்தி வரும் நேரம்...
மே PIT 2010




Saturday, March 20, 2010

ஒற்றைகள்
மார்ச் PIT 2010

போட்டியில் கலந்தே சில பல மாதங்களானாலும், இந்த மாதமும் போட்டியில் கலந்துகொள்ளவில்லையென்றால் ஊரைவிட்டு தள்ளிவைத்து விடுவார்களோ என்ற பயத்தில்....

1. இந்த மாதப்போட்டிக்கு...



உங்கள் பார்வைக்கு...
2.

3.

4.


5.

6.





Thursday, May 7, 2009

உச்சத்தில் ஓர் ஆடு!
மே மாத PIT...

நம்ம PIT போட்டிகளுக்கு ஏற்கனவே எடுத்த படங்களை அனுப்பாமல் புதிதாக எடுத்து அனுப்புவதுதான் வழக்கம் (புதிதாக படம் எடுக்கும் உந்துதலுக்காகத்தான் போட்டியில் கலந்துகொள்வது என்றால் அது மிகையில்லை). ஆனால், வீட்டில் ஒரு புது வரவால், கடந்த மூன்று மாதங்களாக அது இயலவில்லை. சரி! இந்த மாதமாவது புதுப்படம் எடுத்தேயாகவேண்டுமென்று ஒரு உறுதியில் இருந்த நேரத்தில் குடுத்தாங்க ஒரு தலைப்பு (விலங்குகள்). ஆகா! சும்மாவே இந்த ஊர்ல ஒரு விலங்கையும் வெளியில் பார்க்கமுடியாது.(சமூக விலங்கே கார்லதான் போகும்). அப்படியே ஏதாவது ஒன்று தட்டுப்பட்டாலும் அவர்களுடைய ஓனரை கூட்டிகிட்டு நடைபழகும். எங்கேதான் போய் இவர்களைப் படம் எடுப்பது என்று எண்ணிக்கொண்டிருக்கையில், நம்ம An& போட்ட பதிவு நினைவுக்கு வர, அந்த இடத்தில் எடுத்த படங்கள்தான் இவை.

1. போட்டிக்கு
   உச்சத்தில் உறங்கும் ஆடு (Nubian Ibex)


2.உங்கள் பார்வைக்கு
   a. Markhor, Tadjik



   b. Double-Wattled Cassowary



   c. Meerkat


   d. Gerenuk




   e. வரிக்குதிரை






Thursday, May 29, 2008

வசந்தகால யோசெமெட்டீ (Yosemite in Spring)

அமெரிக்காவில் இது வசந்தகாலம்.
பருவகால மாற்றங்களைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும், படித்திருந்தாலும் இங்கு வந்த பிறகுதான் அதை ஓரளவுக்கு பார்க்க முடிகிறது. அமெரிக்கக் கிழக்கு மாகாணங்களில் உள்ளவர்களோடு ஒப்பிடுகையில், என்னைப்போல தென்கலிஃபோர்னியாவில் உள்ளவர்களுக்கு இந்த அனுபவம் கொஞ்சம் கம்மிதான்.

மழைக்காலமா..அங்கே இங்கே சில துளிகள்,
வசந்தகாலமா..பூங்காக்களில் ரோட்டோரங்களில் கொஞ்சம் அதிகமான பூக்கள்,
வெயில்காலங்களில் சற்றே அதிகமான சூடு,
பனிக்காலமா..அல்லது இலையுதிர்காலமா..சுத்தம்.
கிழக்கே உள்ளவர்களுக்கு இவை அனைத்துமே சற்று அதிகம்.

எல்லா பருவமாற்றத்தையும் கிழக்கேயும் வடக்கேயும் போய் பார்க்கிறோமே..இந்த வசந்தகாலத்தை அனுபவிக்க கலிஃபோர்னியாவில் ஒரு இடமுமா இல்லை என்று யோசித்தபோது தோன்றிய இடம் யோசெமெட்டீ (Yosemite). மே மாத கடைசிவாரம் இங்கே நீண்ட விடுமுறையாதலால், யோசெமெட்டீ செல்ல முடிவெடுத்து சென்று பார்த்தால்,... இடமாங்க அது?..எங்கு திரும்பினாலும், சின்ன வயசுல காலண்டர்ல, ஒரு இயற்கை அழகைப் பார்க்கும் போதெல்லாம்,இதெல்லாம் எங்க இருக்கு, எப்படி எடுத்தாங்கனு தோன்றுமே, அப்படி ஒரு இடம்.

பச்சைப்பசேல் புல்வெளிகள்.. ஊசியிலை மரக்காடுகள்.. பனிக்கூட்டம் முத்தமிட்டுச் செல்லும் செங்குத்தான பாறைகள்.. நீர்வீழ்ச்சிகள்.. சலசலத்துச் செல்லும் ஓடைகள்.. எல்லாமே அங்கே உள்ளது.

அதேமாதிரி, எங்க திரும்பினாலும் ஒரு பத்து பேரு முக்காலிய வச்சு படம் எடுத்துக்கிட்டே இருக்காங்க. நம்ம CVR, An&, nathas லாம் போனா முக்காலிய வச்சா நகர்த்த மாட்டாங்க:-). அப்பதான், ஒரு முக்காலிய எடுத்துட்டு வராம போயிட்டோமேனு வருத்தம். இருந்தாலும் ஒரளவு வந்த சில படங்கள்.

1. இது யோசெமெட்டீயில் நுழைந்த உடன் வரும் பூங்கா, பின்னணியில் யோசெமெட்டீ நீர்வீழ்ச்சி.



2. BridalVeil நீர்வீழ்ச்சி



3. BridalVeil நீர்வீழ்ச்சி விழுந்து, ஓடையாக மாறியபிறகு...



4. BridalVeil நீர்வீழ்ச்சிக்கு எதிர்புறம், அங்கேயும் ஒரு நீர்வீழ்ச்சி!



5. பல பூங்காக்களில் இதுவும் ஒன்று.



6. ஓடை



செல்ல வாய்ப்பு கிடைத்தால் தவறவிடக்கூடாத இடம், யோசெமெட்டீ (Yosemite).