Showing posts with label இரவு. Show all posts
Showing posts with label இரவு. Show all posts

Thursday, May 27, 2010

PIT குழுப்போட்டி
Los Colores De Orange -
வண்ணமிகு ஆரஞ்ச் மாவட்டம்


முந்தைய பதிவுகள் Slide-1, Slide-2, Slide-3, Slide-4.


Slide-5 : இரவில் இர்வைன் ஸ்பெக்ட்ரம்(Irvine Spectrum at Night)









Thursday, May 20, 2010

PIT குழுப்போட்டி
Los Colores De Orange -
வண்ணமிகு ஆரஞ்ச் மாவட்டம்


Slide - 2
நியுபோர்ட் கடற்கரையில் கிறிஸ்துமஸ் தின படகுகள் அணிவகுப்பு

முந்தைய பதிவின் தொடர்ச்சி...









Monday, May 17, 2010

PIT குழுப்போட்டி
Los Colores De Orange -
வண்ணமிகு ஆரஞ்ச் மாவட்டம்

PIT குழுப்போட்டி அறிவித்த நாள் ஒரு சுபமூகூர்த்த நாள். அன்றுதான் மனைவி மக்கள் மூன்று மாத கால விடுமுறைக்கு இந்தியா சென்ற நாள்.(பொறுங்க...அப்பத்தானே நினைச்ச இடத்துக்கு, நினைச்ச நேரத்துக்குப் போய்(இது ரொம்ப ரொம்ப முக்கியம்ல) படம் எடுக்க முடியும்).

அதே நேரம் 'குழு'ப்போட்டி அறிவிப்பு ஒருவகையில் பீதியான அறிவிப்பும் கூட. நான் PIT-ல புடுங்குற ஆணியே (புகைப்படமே) ஏனாதானோ என்று இருக்கும்..இதுல இன்னொருத்தரையும் கோர்த்துவிடனுமானு ஒரு கலக்கம். காரணம், நான் வசிக்கும் நகரத்தில், மாவட்டத்தில் (Irvine, Orange County) தமிழ்ப்பதிவுகளை வாசிப்பவர்கள் இருப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை. அதிலும் PIT போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் இல்லை என்றே நினைக்கிறேன். அப்படியே இருந்தாலும் வடக்கே 80 மைல் தொலைவில் An& மற்றும் தெற்கே 80 மைல் தொலைவில் சூர்யா (இவர் அருமையாக PIT போட்டிக்கு படம் அனுப்புபவர். கொஞ்ச நாளாக ஆளைக்காணோம்). அதை, குழு அமைக்க ஆர்வமுள்ளவர்களின் பட்டியலும் உறுதி செய்தது. இந்த லட்சணத்தில் குழுவை எங்கே போய் அமைப்பது.

தனிமை இருந்தும் , படம் எடுக்க நேரம் இருந்தும் குழு அமைக்க ஆள் இல்லையே, என்னடா இது குழுப்போட்டிக்கு வந்த சோதனை என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது புகைப்படத்துறையில் மிகுந்த ஆர்வமுள்ள என் பக்கத்து வீட்டு நண்பர் செந்தில் நினைவிற்கு வந்தார். செந்தில் ஆர்வமாக குழுவில் சேர்ந்தவுடன், என்னைப்போலவே தங்கமணியை ஊருக்கு அனுப்பிவிட்டு தனிமையில் இருந்த இன்னொரு நண்பர் தினேஷ் பாபுவும் குழுவில் ஒரு Field giude- ஆக இணைந்தார். இவர் ஒரு சிறந்த Explorer. ஆரஞ்சு மாவட்டத்தின் பல இடங்கள் இவருக்கு அத்துப்படி. ஆகவே தினேஷ்பாபு இடங்களைத் தேர்வு செய்ய, செந்திலும் நானும் படம் பிடித்தவை தான் இத்தொடரில் இடம்பெறப் போகும் புகைப்படங்கள் (அப்புறம் நாங்கல்லாம் எப்படி தொடர் எழுதுறதாம்?).

ஸ்பானிஷ் மொழி நம்ம மலையாளத்தைப் போல் கொஞ்சும் மொழி என்பதாலும், ஆரஞ்ச் மாவட்டத்தில் அதிக அளவில் அம்மொழி பேசும் மக்கள் இருப்பதாலும் தலைப்பு Los Colores de Orange - Colorful Orange - வண்ணமிகு ஆரஞ்ச் மாவட்டம்.

Slide - 1: நியுபோர்ட் கடற்கரையில் படகுகளின் அணிவகுப்பு & பால்போவா தீவு(Balboa Island)

தொடர்ந்து 101 ஆண்டாக, கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது நடக்கும் படகுகள் அணிவகுப்பின்போது எடுத்தவை.


























மேலதிகத் தகவல்களுக்கு:
1. படம் எடுக்கப்பட்ட இடம் வரைபடத்தில்
2. http://www.visitnewportbeach.com/

3. http://www.balboa-island.net/h.htm
4. http://www.christmasboatparade.com/

பின்குறிப்பு:
1. இந்த வலைப்பதிவில் என்னுடைய சில படங்கள் மட்டுமே உள்ளது. செந்திலும் நானும் எடுத்த படங்களை ஒருசேர பார்க்க இங்கே(http://picasaweb.google.com/fantabulousoc/LosColoresDeOrange) கிளிக்கவும்.
2. Slides (அதாங்க தொடர்) வரவர இங்கே சேர்க்கப்படும்.
3. இத்தொடரில் வரும் அனைத்துப் படங்களுக்கும் வரும் வரவேற்பை (பின்னூட்டம்னே சொல்ல வேண்டியதுதானே..சின்னப்புள்ள மாதிரி என்ன வெட்கம்) வைத்தே படங்களை குழுப்போட்டிக்கு தேர்வு செய்து அனுப்புவதாக உத்தேசம்.
4. EXIF உட்பட ஒவ்வொரு படத்திற்கான விளக்கங்கள் பிக்காஸாவில் உள்ளன. பின்னூட்டத்தை விரிவாக பிக்காஸாவிலும் அளிக்கலாம்.

படகுகளின் அணிவகுப்பு தொடரும்

Saturday, February 14, 2009

ரங்கராட்டினக் குதிரை -
பிப்ரவரி PIT...




Wednesday, July 16, 2008

ஜூலை இரவு கடற்கரை மற்றும் CVR

வேலைப்பளு அதிகமாகையால் இந்த மாதம் 14-ஆம் தேதி வரை PIT-க்காக படம் எடுக்கும் முடிவில் இல்லை, என்னால் முடியவும் இல்லை.
திடீரென்று 14-ஆம் தேதி இரவு ஒரு யோசனை! போட்டியில் வெற்றி பெறுவதா முக்கியம், கலந்து கொள்வதுதானே நமக்கு ஆனந்தம்.
அதுவும் நம்ம favourite nathas-ம் An&-ம் நடுவர்கள். எடுத்துதான் பார்ப்போமே என்று நம்ம வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள கடற்கரைக்குச் சென்று சில படங்கள் எடுத்தேன்.
அதுல ஒன்று இதோ!


ஏற்கனவே பல மாதங்களுக்கு முன் எடுத்த படத்தைப்போல் ஒரு நாலைந்து படங்கள் எடுத்த பின்பு ஒரு சந்தேகம். ஏனென்றால் நம்ம பரணீயும் மற்றும் சிலரும் அதே மாதிரி படங்களை இந்த மாதப் போட்டிக்கு அனுப்பி இருந்ததால், வேற மாதிரி முயற்சி பண்ணலாமே என்று எடுத்த படம் தான் இது!



எடுத்து முடித்து வீட்டிற்கு வரும்போது இரவு 11:00 ஆகிவிட்டிருந்தது.
அடுத்த நாள், அலுவலகம் சென்றபிறகு நேரம் சென்றதே தெரியவில்லை. சட்டுனு நேரம் பார்த்தால் காலை 11:00 (இந்திய நேரம் இரவு 11:30).
ஆகா! நம்ம PIT மக்கள் 11:30(இங்கே)-யானால் கடையை மூடிறுவாங்களே என்று ஒரே ஓட்டம் வீட்டுக்கு.
வீட்டுக்குப் போய் படங்களைத் திறந்தால் ஏதோ குறைகிறமாதிரி ஒரு உணர்வு. என்ன பண்ணலாம் என்று வேகமாக (திரும்பி அலுவலகம் செல்லனும்ணே:-))யோசித்தால் இரு வாரங்களுக்கு முன் எடுத்த நிலவுப் படம் நினைவில் வந்தது. அதுதான் இது!

(வீட்டிலேயே இருந்து எடுத்ததால் ஒரு மரக்கிளை நிலவுக்குக் குறுக்கே செல்லுவது தெரியும்.).

இந்த நிலவை வெட்டி அந்தப் படத்தில் இணைக்கலாமே என்று யோசித்தால், அந்த அவசரத்தில் தொழில்நுட்பம் மண்டைக்குள்ள வரவேமாட்டேன் என்று ஒரே அடம்.
அதான் ஒரு அவசர அடியில் இரண்டையும் சேர்த்து போட்டிக்கு அனுப்பினேன், அதுவும் கொஞ்சம் தாமதமாக(15 நிமிடம் என்று நினைவு....ஆட்டையில் சேர்த்துக்கொண்டதற்கு PIT-க்கு நன்றி).
நம்ம கில்லாடிகள் nathas-ம் An&-ம் நடுவர்களாக உள்ள இந்த மாசமாப் பார்த்தா இப்படி நடக்கனும் என்று அப்போதே யோசித்தேன்.
அதுக்குள்ள நம்ம CVR வந்து பின்னூட்டிட்டாரு. அதனால், CVR-க்காக, போட்டிக்கு அனுப்பிய படத்தைக் கொஞ்சம் ஒளியேத்தி இதோ!



போட்டிக்கு அனுப்பிய ஒரிஜினல் இது!

நான் இவ்வளவு எழுதுனதே இல்லை. வாய்ப்பளித்த CVR-க்கு நன்றி!!!.
பின்குறிப்பு: சொல்ல வந்த விஷயத்தயே சொல்லலயே!..அந்த நிலவு மட்டும் தான் சேர்த்தது:-)

Tuesday, July 15, 2008

இரவு நேரம்
PIT -- ஜூலை போட்டிக்கு



இயற்கை ஒளியும் செயற்கை ஒளியும் சந்திக்கும் இடம்.
வேலைப்பளுவில் கடைசி நேரத்தில் இதுதான் எடுக்க முடிந்தது.