Friday, November 20, 2009

அனைத்தும் மறுக்கப்பட்ட வாண்டுகள்
நவம்பர் PIT 2009

12 வருடங்களுக்கு முன் நந்தம்பாக்கம் IDPL அருகே ரோட்டோரத்தில் Konica 100 ஃப்லிமில் எடுத்த படம். இப்போது அந்த இடமே தலைகீழாய் மாறிப்போய்விட்டது. Scan செய்து போட்டுள்ளேன். அதான் தெளிவு கம்மி.



Saturday, October 17, 2009

சட்டத்தில் சிக்காத பொம்மைகள்!
அக்டோபர் PIT 2009

ஏற்கனவே தெரிந்திருந்தாலும் ரொம்பச் சுலபம் என்று நினைப்பவைதான் ரொம்பக் கடினம் என்று மீண்டும் உணர வைத்த மற்றுமொரு தலைப்பு! (அதற்கு ஒரு வாரமாக உள்ள ஃப்ளு காய்ச்சலும் ஒரு காரணம்:-()

போட்டிக்கு...

1. சட்டத்தில் சிக்காத பொம்மைகள்!




உங்கள் பார்வைக்கு..

2.இவ்வளவு அழகானவங்க கூட நானா? - Shrek :-)



3.பொறாமையில் மேலே உள்ள Shrek-கை பார்த்து Donkey...ங்ஏ(ராஜேந்திரக்குமாருடைய அந்த ngey எப்படி டைப் செய்வது?)

4. நாங்க ஃபாமிலி....


Tuesday, September 15, 2009

அந்திப்பொழுதில் ஒரு ஜோடி!
செப்டம்பர் PIT 2009



Friday, July 24, 2009

பனிப்புகையினூடே ஒரு தங்க வாசல் -
ஜூலை PIT 2009



Monday, June 15, 2009

முதுமையினால் வந்த ஞாபகமறதி!
ஜூன் PIT 2009

இந்த மாதப்போட்டிக்கு ஒரு புதுப்படமும் எடுக்காமல் (எடுக்கும் மனநிலையில் இல்லாமல் என்பதே சரி), பதினான்கு வருடத்திற்கு முன்பு எடுத்த இந்த படத்தையாவது அனுப்பலாமென்று நினைத்திருந்தேன். இந்த மாத தலைப்பு ராசியோ என்னவோ, முதுமையின் முக்கிய அடையாளமான ஞாபகமறதி வந்து தொலைத்துவிட்டது.போட்டிக்கு படம் அனுப்பவில்லை.



Friday, May 22, 2009

நக்கீரன் அட்டைப்படமும் முதல்வன் திரைப்படமும்

இந்த பதிவுக்கு "நக்கீரன் அட்டைப்படமும் சில கேணக்கிறுக்கனுங்களும்" என்று தலைப்பு வைக்கத்தான் நினைத்தேன். அந்த அளவுக்கு சில நண்பர்களின் பதிவுகள் உள்ளன.

சத்யம் திரையரங்கில் முதல்வன் திரைப்படத்தில் முதல்வனே பாடல் ஓடிக்கொண்டிருக்கும்போது, என்னருகில் ஒருத்தர் அடித்த கமெண்ட் "என்ன மாப்ளே! லூசுத்தனமா எடுத்திருக்கானுங்க..இவ்ளோ பெரிய பாம்பு இந்தியாவிலேயே இல்லையே".

இந்த கமெண்ட் அடித்தவர்கள்தான் பதிவுலகில் உலாவருகிறார்களோ என்ற சந்தேகத்தை ஒதுக்க முடியவில்லை. யாரோ சொன்னமாதிரி, தமிழனுக்கு நகைச்சுவை உணர்வு குறைந்துவிட்டது என்பது உண்மைதான் போலும்.

Wednesday, May 13, 2009

ஈழம் பற்றி ஒபாமா...

ஒரு வழியாக அமெரிக்க அதிபர் ஒபாமா இலங்கைப்போர் பற்றி சற்றுமுன் பேசினார்.
AP சுட்டி (http://www.google.com/hostednews/ap/article/ALeqM5hnmU4W5RjgYLAiB__rK0F2NbEawgD985JHNO0)

மற்றும் ஒரு சுட்டி (http://www.google.com/hostednews/afp/article/ALeqM5j5vYCewiQgRHA-eJeomnhdtq15Iw)