Wednesday, July 16, 2008

ஜூலை இரவு கடற்கரை மற்றும் CVR

வேலைப்பளு அதிகமாகையால் இந்த மாதம் 14-ஆம் தேதி வரை PIT-க்காக படம் எடுக்கும் முடிவில் இல்லை, என்னால் முடியவும் இல்லை.
திடீரென்று 14-ஆம் தேதி இரவு ஒரு யோசனை! போட்டியில் வெற்றி பெறுவதா முக்கியம், கலந்து கொள்வதுதானே நமக்கு ஆனந்தம்.
அதுவும் நம்ம favourite nathas-ம் An&-ம் நடுவர்கள். எடுத்துதான் பார்ப்போமே என்று நம்ம வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள கடற்கரைக்குச் சென்று சில படங்கள் எடுத்தேன்.
அதுல ஒன்று இதோ!


ஏற்கனவே பல மாதங்களுக்கு முன் எடுத்த படத்தைப்போல் ஒரு நாலைந்து படங்கள் எடுத்த பின்பு ஒரு சந்தேகம். ஏனென்றால் நம்ம பரணீயும் மற்றும் சிலரும் அதே மாதிரி படங்களை இந்த மாதப் போட்டிக்கு அனுப்பி இருந்ததால், வேற மாதிரி முயற்சி பண்ணலாமே என்று எடுத்த படம் தான் இது!



எடுத்து முடித்து வீட்டிற்கு வரும்போது இரவு 11:00 ஆகிவிட்டிருந்தது.
அடுத்த நாள், அலுவலகம் சென்றபிறகு நேரம் சென்றதே தெரியவில்லை. சட்டுனு நேரம் பார்த்தால் காலை 11:00 (இந்திய நேரம் இரவு 11:30).
ஆகா! நம்ம PIT மக்கள் 11:30(இங்கே)-யானால் கடையை மூடிறுவாங்களே என்று ஒரே ஓட்டம் வீட்டுக்கு.
வீட்டுக்குப் போய் படங்களைத் திறந்தால் ஏதோ குறைகிறமாதிரி ஒரு உணர்வு. என்ன பண்ணலாம் என்று வேகமாக (திரும்பி அலுவலகம் செல்லனும்ணே:-))யோசித்தால் இரு வாரங்களுக்கு முன் எடுத்த நிலவுப் படம் நினைவில் வந்தது. அதுதான் இது!

(வீட்டிலேயே இருந்து எடுத்ததால் ஒரு மரக்கிளை நிலவுக்குக் குறுக்கே செல்லுவது தெரியும்.).

இந்த நிலவை வெட்டி அந்தப் படத்தில் இணைக்கலாமே என்று யோசித்தால், அந்த அவசரத்தில் தொழில்நுட்பம் மண்டைக்குள்ள வரவேமாட்டேன் என்று ஒரே அடம்.
அதான் ஒரு அவசர அடியில் இரண்டையும் சேர்த்து போட்டிக்கு அனுப்பினேன், அதுவும் கொஞ்சம் தாமதமாக(15 நிமிடம் என்று நினைவு....ஆட்டையில் சேர்த்துக்கொண்டதற்கு PIT-க்கு நன்றி).
நம்ம கில்லாடிகள் nathas-ம் An&-ம் நடுவர்களாக உள்ள இந்த மாசமாப் பார்த்தா இப்படி நடக்கனும் என்று அப்போதே யோசித்தேன்.
அதுக்குள்ள நம்ம CVR வந்து பின்னூட்டிட்டாரு. அதனால், CVR-க்காக, போட்டிக்கு அனுப்பிய படத்தைக் கொஞ்சம் ஒளியேத்தி இதோ!



போட்டிக்கு அனுப்பிய ஒரிஜினல் இது!

நான் இவ்வளவு எழுதுனதே இல்லை. வாய்ப்பளித்த CVR-க்கு நன்றி!!!.
பின்குறிப்பு: சொல்ல வந்த விஷயத்தயே சொல்லலயே!..அந்த நிலவு மட்டும் தான் சேர்த்தது:-)

7 comments:

said...

இங்கே நிலவு முக்கால் வடிவிலதான் இருக்கு.உங்க ஊருல மட்டும் எப்படி முழு நிலவு?எனக்கென்னமோ இது அழுகுணி ஆட்டம் மாதிரிதான் தெரியுது.எப்படியோ நிலவும் ஒளியும் மனசுல ஒட்டிக்கொண்டது.

said...


ராஜ நடராஜன்,
அந்த நிலவு படம் முழு pournami அன்று எடுத்தது. அதனால்தான் முழு நிலா!

said...

படம் சூப்பர்.

//அதுவும் நம்ம favourite nathas-ம் An&-ம் நடுவர்கள்//

இதெல்லாம், லஞ்சம் கொடுக்கரமாதிரியில்ல இருக்கு.
இல்லீகல் மூவ் ;)

said...

//SurveySan said...
படம் சூப்பர்.

//அதுவும் நம்ம favourite nathas-ம் An&-ம் நடுவர்கள்//

இதெல்லாம், லஞ்சம் கொடுக்கரமாதிரியில்ல இருக்கு.
இல்லீகல் மூவ் ;)
//
லஞ்சமா?? இது வேறயா...
நல்லா கிளப்புறாங்கப்பா பீதிய:-)

said...

ஆஹா!!
தலைப்புல என் பேரை வேற போட்டுட்டீங்களா?? :-)
முதலில் பார்க்கும்போதே ஏதோ சரொயில்லாதது போல இருந்தது! அந்த செயற்கை விளக்கு ஒளிகளும்,நிலாவும் சேர்ந்து இருந்தது மிகவும் வித்தியாசமாக தெரிந்தது.
இப்பொழுது ஏன் என்று தெரிகிறது! :-)

said...

//
CVR said...
ஆஹா!!
தலைப்புல என் பேரை வேற போட்டுட்டீங்களா?? :-)
//
நீங்கள் தானே முதலில் கண்டுபிடித்தீர்கள். அதனாலதான் தலைப்பில் பெயர்:-)
CVR, நிலா மட்டும் தான் வேற படம். மீதி அனைத்தும் (மஞ்சள் மற்றும் நீல பிரதிபலிப்புகள்) ஒரே படம்:-)

said...
This comment has been removed by the author.