இந்த படத்தில் சிறப்பாகச் சொல்ல ஒன்றும் இல்லையென்றாலும் அதனுடைய பின்னணிக்காக எனக்கு மிகவும் பிடித்த படம். பின்னணி வேற ஒன்னும் இல்லீங்க. விஸ்வரூபம் எடுக்கும்முன் அமைதியாக அன்னநடை போட்டுச் செல்லும் நயாகரா ஆறுதான் out of Focus-ல்.
நான் இங்கே நீயும் அங்கே இந்த தனிமையில் நிமிஷங்கள் வருஷமானது ஏனோ வான் அங்கே நீலம் இங்கே இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானது ஏனோ தனிமை தனிமையோ... கொடுமை கொடுமையோ...
(நியுயார்க் நகரம் பாடலின் வரிகள்..படம்: சில்லென்று ஒரு காதல்)
நான்கைந்து மாதங்களாக பார்த்த பின்பு "ஆஹா..தலைப்புகள் எல்லாம் ரொம்ப ஈஸியா இருக்கே! நாம்ம கூட கலந்துக்கலாம் போல இருக்கே!!!"-னு ஆசைப்பட்டு போன மாசம் கலந்துகிட்டதுக்கு.. இந்த மாசமே PIT குழு வச்சாங்க ஆப்பு... மத்தவங்களுக்கு எப்படியோ.."தனிமை" தலைப்பு நம்மளை கொஞ்சம் மண்டை காயவச்சதென்னவோ உண்மை...அதான் இவ்வளவு தாமதம்...இருந்தாலும் நல்ல தலைப்பு..