Monday, June 16, 2008

தியாகராசர் பொறியியல் கல்லூரி, மதுரை.




கல்லூரி நினைவுகள் எப்போதுமே அலாதியானவை. மேலே உள்ள படங்கள் ஒரு 13 அல்லது 14 வருடங்களுக்கு முன்பு கல்லூரிக்கு அருகில் உள்ள சிறிய குன்றின் (மயில்காடு?) மீதேறி எடுத்தது. அந்த காலத்தில் அவ்வளவு பச்சையாக இருக்கும். இப்ப எப்படினு தெரியல.
PIT ஜூன் மாத போட்டிக்கு பழைய Negative-களைத் தேடும்போது கிடைத்தது.
தியாகராசர் மக்கள் யாராவது இருக்கீங்களா?

Friday, June 13, 2008

அன்றாட வேலையினூடே ஒரு நாள்
(PIT ஜூன் மாத போட்டிக்கு)

1. நெல்மணிகளை உலர்த்தும் விவசாயிகள்...



மேலே உள்ள படம் இந்த மாத போட்டிக்கு.
கீழே உள்ள படங்கள் உங்கள் பார்வைக்கு!

2. மரப்பெட்டிகளை பலகைகளாக்கும் வேலையில் தந்தையும் மகனும்...



3. மகன் மட்டும் வேலை மும்முரத்தில்...



4. பள்ளிக்கு அனுப்ப மகளைத் தயார் செய்யும் தாய்...




5. ஆடு மேய்த்துவிட்டு செல்லும் முதியவர்...



6. விளையாட்டுப்பருவத்தில் சாப்பிடுவது கூட ஒரு வேலைதானே:-)



இந்த முறை வேலைப்பளுவினால் ஒரு படம் கூட புதிதாக எடுக்க முடியவில்லை.
இந்த படங்கள் அனைத்தும் 12 வருடங்களுக்கு முன் Konica மற்றும் Agfa ஃபிலிமில் எடுத்தவை. கலர் ஃபிலிம் நாளடைவில் மங்கலாகும் என கேள்விப்பட்டிருந்தாலும், இந்த Negative-களைப் ப்ரிண்ட் போடும்போது கண்கூடாகப் பார்த்தேன். எடுத்த காலகட்டங்களில் அருமையாக இருந்த வண்ணங்கள் மற்றும் துல்லியம் இப்போது சுத்தமாகக் காணவில்லை. படங்களை Scan செய்து பார்த்தால் இன்னும் சுத்தம்.
உங்களிடம் ஏதேனும் நல்ல படங்கள் இருந்தால், இன்னும் மோசமாக ஆவதற்க்குள் உடனே ப்ரிண்ட் & Scan செய்து வைத்துக்கொள்வது உத்தமம்.

நன்றி: இந்தியாவிலேயே விட்டுட்டு வந்த Negative-களை, சென்ற வருடம் அமெரிக்கா வரும்போது எடுத்து வந்த பெற்றோருக்கு!
இல்லையென்றால் இந்த மாத PIT போட்டியை தவற விட்டு இருப்பேன்.