Friday, June 13, 2008

அன்றாட வேலையினூடே ஒரு நாள்
(PIT ஜூன் மாத போட்டிக்கு)

1. நெல்மணிகளை உலர்த்தும் விவசாயிகள்...



மேலே உள்ள படம் இந்த மாத போட்டிக்கு.
கீழே உள்ள படங்கள் உங்கள் பார்வைக்கு!

2. மரப்பெட்டிகளை பலகைகளாக்கும் வேலையில் தந்தையும் மகனும்...



3. மகன் மட்டும் வேலை மும்முரத்தில்...



4. பள்ளிக்கு அனுப்ப மகளைத் தயார் செய்யும் தாய்...




5. ஆடு மேய்த்துவிட்டு செல்லும் முதியவர்...



6. விளையாட்டுப்பருவத்தில் சாப்பிடுவது கூட ஒரு வேலைதானே:-)



இந்த முறை வேலைப்பளுவினால் ஒரு படம் கூட புதிதாக எடுக்க முடியவில்லை.
இந்த படங்கள் அனைத்தும் 12 வருடங்களுக்கு முன் Konica மற்றும் Agfa ஃபிலிமில் எடுத்தவை. கலர் ஃபிலிம் நாளடைவில் மங்கலாகும் என கேள்விப்பட்டிருந்தாலும், இந்த Negative-களைப் ப்ரிண்ட் போடும்போது கண்கூடாகப் பார்த்தேன். எடுத்த காலகட்டங்களில் அருமையாக இருந்த வண்ணங்கள் மற்றும் துல்லியம் இப்போது சுத்தமாகக் காணவில்லை. படங்களை Scan செய்து பார்த்தால் இன்னும் சுத்தம்.
உங்களிடம் ஏதேனும் நல்ல படங்கள் இருந்தால், இன்னும் மோசமாக ஆவதற்க்குள் உடனே ப்ரிண்ட் & Scan செய்து வைத்துக்கொள்வது உத்தமம்.

நன்றி: இந்தியாவிலேயே விட்டுட்டு வந்த Negative-களை, சென்ற வருடம் அமெரிக்கா வரும்போது எடுத்து வந்த பெற்றோருக்கு!
இல்லையென்றால் இந்த மாத PIT போட்டியை தவற விட்டு இருப்பேன்.

9 comments:

வடுவூர் குமார் said...

அருமையான படங்கள்.

ராமலக்ஷ்மி said...

அத்தனை படங்களும் அருமையான கவிதைகள். முதல் படம் சூப்பர் ஷாட்.
காணக் கிடைத்த காட்சியை எங்கள் கண் முன்னும் துல்லியமாகக் கொண்டு வந்திருக்கிறீகள்.

வாழ்த்துக்கள் அமல்!

Amal said...

நன்றி வடுவூர் குமார் & ராமலக்ஷ்மி!!!

KARTHIK said...

//காலகட்டங்களில் அருமையாக இருந்த வண்ணங்கள் மற்றும் துல்லியம் இப்போது சுத்தமாகக் காணவில்லை. //

படம் நலாருக்குங்க.

சரண் said...

முதியவர் படம்.. ஒரு புகைப்படக் கவிதை... மனதில் ஏதோ ஒருவகை எண்ணங்கள் தோன்ற வைக்கிறது.. அட்டகாசமான பதிவு..

போட்டிகான படமும் கலக்கல். கண்டிப்பாக வெற்றி பெறும்.
வாழ்த்துக்கள்.

Amal said...

நன்றி கார்த்திக்!

வாழ்த்துகளுக்கு நன்றி சூர்யா!!!

Shan Nalliah / GANDHIYIST said...

well done!

Amal said...

Thanks Shan Nalliah / GANDHIYIST !

Unknown said...

Wonderful pics Mr.Amal!!