Thursday, May 29, 2008

வசந்தகால யோசெமெட்டீ (Yosemite in Spring)

அமெரிக்காவில் இது வசந்தகாலம்.
பருவகால மாற்றங்களைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும், படித்திருந்தாலும் இங்கு வந்த பிறகுதான் அதை ஓரளவுக்கு பார்க்க முடிகிறது. அமெரிக்கக் கிழக்கு மாகாணங்களில் உள்ளவர்களோடு ஒப்பிடுகையில், என்னைப்போல தென்கலிஃபோர்னியாவில் உள்ளவர்களுக்கு இந்த அனுபவம் கொஞ்சம் கம்மிதான்.

மழைக்காலமா..அங்கே இங்கே சில துளிகள்,
வசந்தகாலமா..பூங்காக்களில் ரோட்டோரங்களில் கொஞ்சம் அதிகமான பூக்கள்,
வெயில்காலங்களில் சற்றே அதிகமான சூடு,
பனிக்காலமா..அல்லது இலையுதிர்காலமா..சுத்தம்.
கிழக்கே உள்ளவர்களுக்கு இவை அனைத்துமே சற்று அதிகம்.

எல்லா பருவமாற்றத்தையும் கிழக்கேயும் வடக்கேயும் போய் பார்க்கிறோமே..இந்த வசந்தகாலத்தை அனுபவிக்க கலிஃபோர்னியாவில் ஒரு இடமுமா இல்லை என்று யோசித்தபோது தோன்றிய இடம் யோசெமெட்டீ (Yosemite). மே மாத கடைசிவாரம் இங்கே நீண்ட விடுமுறையாதலால், யோசெமெட்டீ செல்ல முடிவெடுத்து சென்று பார்த்தால்,... இடமாங்க அது?..எங்கு திரும்பினாலும், சின்ன வயசுல காலண்டர்ல, ஒரு இயற்கை அழகைப் பார்க்கும் போதெல்லாம்,இதெல்லாம் எங்க இருக்கு, எப்படி எடுத்தாங்கனு தோன்றுமே, அப்படி ஒரு இடம்.

பச்சைப்பசேல் புல்வெளிகள்.. ஊசியிலை மரக்காடுகள்.. பனிக்கூட்டம் முத்தமிட்டுச் செல்லும் செங்குத்தான பாறைகள்.. நீர்வீழ்ச்சிகள்.. சலசலத்துச் செல்லும் ஓடைகள்.. எல்லாமே அங்கே உள்ளது.

அதேமாதிரி, எங்க திரும்பினாலும் ஒரு பத்து பேரு முக்காலிய வச்சு படம் எடுத்துக்கிட்டே இருக்காங்க. நம்ம CVR, An&, nathas லாம் போனா முக்காலிய வச்சா நகர்த்த மாட்டாங்க:-). அப்பதான், ஒரு முக்காலிய எடுத்துட்டு வராம போயிட்டோமேனு வருத்தம். இருந்தாலும் ஒரளவு வந்த சில படங்கள்.

1. இது யோசெமெட்டீயில் நுழைந்த உடன் வரும் பூங்கா, பின்னணியில் யோசெமெட்டீ நீர்வீழ்ச்சி.



2. BridalVeil நீர்வீழ்ச்சி



3. BridalVeil நீர்வீழ்ச்சி விழுந்து, ஓடையாக மாறியபிறகு...



4. BridalVeil நீர்வீழ்ச்சிக்கு எதிர்புறம், அங்கேயும் ஒரு நீர்வீழ்ச்சி!



5. பல பூங்காக்களில் இதுவும் ஒன்று.



6. ஓடை



செல்ல வாய்ப்பு கிடைத்தால் தவறவிடக்கூடாத இடம், யோசெமெட்டீ (Yosemite).

11 comments:

சரண் said...

Yosemite.. உண்மையாகவே எல்லோரும் ஒருமுறையாவது செல்ல வேண்டிய இடம். படங்கள் நன்றாக வந்திருக்கிறது.

SurveySan said...

மூணாவது படம் அரூமையா வந்திருக்கு.

எல்லா படங்களையும் பாத்தேன்..
கலக்கியிருக்கீங்க.

உண்மைத்தமிழன் said...

அப்பா.. கண்ணுக்குள்ளேயே நிக்குது..

இதுக்கெல்லாம் கொடுத்து வைச்சிருக்கணும்..

Amal said...

//
சூர்யா said...
Yosemite.. உண்மையாகவே எல்லோரும் ஒருமுறையாவது செல்ல வேண்டிய இடம். படங்கள் நன்றாக வந்திருக்கிறது
//
உண்மை சூர்யா. எல்லோரும் ஒருமுறையாவது செல்ல வேண்டிய இடம் தான் அது.
Yosemite-ல் எடுத்த உங்களுடைய மே மாத போட்டிக்கான படமும் அருமை. வேலைப்பளுவில் பின்னூட்ட முடியவில்லை.

Amal said...

//
SurveySan said...
மூணாவது படம் அரூமையா வந்திருக்கு.

எல்லா படங்களையும் பாத்தேன்..
கலக்கியிருக்கீங்க.
//
நன்றி Surveysan.
முக்காலி இருந்திருந்தால் அந்த மூன்றாவது படத்தை இன்னும் நன்றாக எடுத்து இருக்கலாம்:-(

Amal said...

//
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
அப்பா.. கண்ணுக்குள்ளேயே நிக்குது..

இதுக்கெல்லாம் கொடுத்து வைச்சிருக்கணும்..
//
உண்மைத் தமிழன் முதல் முறையாக வந்து இருக்கீங்க, நன்றி!!!

நாதஸ் said...

3rd pic is too good... :)
U have increased my desire to visit Yosemite multifold... :D

Amal said...

nathas,
Don't miss to visit yosemite. ஆனால், அந்த வெளிர் பச்சை நிறம் இன்னும் இரு வாரங்களுக்குத்தான் இருக்கும். அதற்குப்பின் அடர்ந்த பச்சை நிறமாகி விடும்.

Amal said...

பின்னூட்டங்கள் சொதப்புவதால் ஒரு சின்ன சோதனைப் பின்னூட்டம்.

குலவுசனப்பிரியன் said...

//அமெரிக்கக் கிழக்கு மாகாணங்களில் உள்ளவர்களோடு ஒப்பிடுகையில், என்னைப்போல தென்கலிஃபோர்னியாவில் உள்ளவர்களுக்கு இந்த அனுபவம் கொஞ்சம் கம்மிதான்.//

தென் கிழக்கே புளோரிடாவிலும் உங்க நிலமைதான். வடபுறம் வடக்கு கரோலினாலிருந்துதான் நான்கு பருவங்களின் வித்தியாசம் நன்றாக தெரிகிறது.

Anonymous said...

Padangal "dull" aaga irukirathu.Contrast boosting seidhirukkalam.

Graduated filters allathu multiple exposures illaamal intha kaatchiyai eduppathu kadinam.
Highlights blow aagi irukkalaam.