Friday, May 22, 2009

நக்கீரன் அட்டைப்படமும் முதல்வன் திரைப்படமும்

இந்த பதிவுக்கு "நக்கீரன் அட்டைப்படமும் சில கேணக்கிறுக்கனுங்களும்" என்று தலைப்பு வைக்கத்தான் நினைத்தேன். அந்த அளவுக்கு சில நண்பர்களின் பதிவுகள் உள்ளன.

சத்யம் திரையரங்கில் முதல்வன் திரைப்படத்தில் முதல்வனே பாடல் ஓடிக்கொண்டிருக்கும்போது, என்னருகில் ஒருத்தர் அடித்த கமெண்ட் "என்ன மாப்ளே! லூசுத்தனமா எடுத்திருக்கானுங்க..இவ்ளோ பெரிய பாம்பு இந்தியாவிலேயே இல்லையே".

இந்த கமெண்ட் அடித்தவர்கள்தான் பதிவுலகில் உலாவருகிறார்களோ என்ற சந்தேகத்தை ஒதுக்க முடியவில்லை. யாரோ சொன்னமாதிரி, தமிழனுக்கு நகைச்சுவை உணர்வு குறைந்துவிட்டது என்பது உண்மைதான் போலும்.

Wednesday, May 13, 2009

ஈழம் பற்றி ஒபாமா...

ஒரு வழியாக அமெரிக்க அதிபர் ஒபாமா இலங்கைப்போர் பற்றி சற்றுமுன் பேசினார்.
AP சுட்டி (http://www.google.com/hostednews/ap/article/ALeqM5hnmU4W5RjgYLAiB__rK0F2NbEawgD985JHNO0)

மற்றும் ஒரு சுட்டி (http://www.google.com/hostednews/afp/article/ALeqM5j5vYCewiQgRHA-eJeomnhdtq15Iw)

Thursday, May 7, 2009

உச்சத்தில் ஓர் ஆடு!
மே மாத PIT...

நம்ம PIT போட்டிகளுக்கு ஏற்கனவே எடுத்த படங்களை அனுப்பாமல் புதிதாக எடுத்து அனுப்புவதுதான் வழக்கம் (புதிதாக படம் எடுக்கும் உந்துதலுக்காகத்தான் போட்டியில் கலந்துகொள்வது என்றால் அது மிகையில்லை). ஆனால், வீட்டில் ஒரு புது வரவால், கடந்த மூன்று மாதங்களாக அது இயலவில்லை. சரி! இந்த மாதமாவது புதுப்படம் எடுத்தேயாகவேண்டுமென்று ஒரு உறுதியில் இருந்த நேரத்தில் குடுத்தாங்க ஒரு தலைப்பு (விலங்குகள்). ஆகா! சும்மாவே இந்த ஊர்ல ஒரு விலங்கையும் வெளியில் பார்க்கமுடியாது.(சமூக விலங்கே கார்லதான் போகும்). அப்படியே ஏதாவது ஒன்று தட்டுப்பட்டாலும் அவர்களுடைய ஓனரை கூட்டிகிட்டு நடைபழகும். எங்கேதான் போய் இவர்களைப் படம் எடுப்பது என்று எண்ணிக்கொண்டிருக்கையில், நம்ம An& போட்ட பதிவு நினைவுக்கு வர, அந்த இடத்தில் எடுத்த படங்கள்தான் இவை.

1. போட்டிக்கு
   உச்சத்தில் உறங்கும் ஆடு (Nubian Ibex)


2.உங்கள் பார்வைக்கு
   a. Markhor, Tadjik



   b. Double-Wattled Cassowary



   c. Meerkat


   d. Gerenuk




   e. வரிக்குதிரை