Friday, May 22, 2009

நக்கீரன் அட்டைப்படமும் முதல்வன் திரைப்படமும்

இந்த பதிவுக்கு "நக்கீரன் அட்டைப்படமும் சில கேணக்கிறுக்கனுங்களும்" என்று தலைப்பு வைக்கத்தான் நினைத்தேன். அந்த அளவுக்கு சில நண்பர்களின் பதிவுகள் உள்ளன.

சத்யம் திரையரங்கில் முதல்வன் திரைப்படத்தில் முதல்வனே பாடல் ஓடிக்கொண்டிருக்கும்போது, என்னருகில் ஒருத்தர் அடித்த கமெண்ட் "என்ன மாப்ளே! லூசுத்தனமா எடுத்திருக்கானுங்க..இவ்ளோ பெரிய பாம்பு இந்தியாவிலேயே இல்லையே".

இந்த கமெண்ட் அடித்தவர்கள்தான் பதிவுலகில் உலாவருகிறார்களோ என்ற சந்தேகத்தை ஒதுக்க முடியவில்லை. யாரோ சொன்னமாதிரி, தமிழனுக்கு நகைச்சுவை உணர்வு குறைந்துவிட்டது என்பது உண்மைதான் போலும்.

19 comments:

said...

//கேணக்கிறுக்கனுங்களும்//
நீங்க சொல்றதையும் நம்புறோம் அவுனுங்க சொல்றதையும் நம்புறோம். நாங்க கேணையனுங்கதானுங்க. உண்மைய யாரு சொல்லுவாங்கன்னு ஒரு வார்த்தைய சொல்லிருங்க

said...

இளா!

தவறாக எடுத்துக் கொள்ளமாட்டீர்கள் என்று நம்புகிறேன். நான் சொல்லவருவது, செய்தி உண்மையா பொய்யா என்பதல்ல. அந்த அட்டைப்படம் மிக மிக ஜனரஞ்சகமான ஒன்று! கடந்த ஒரு வாரகாலமாக மன உளைச்சலில் உள்ள என்னைப்போன்றோர் ரசிக்க, திருப்திப்பட மட்டுமே! அட்டைப்படத்தையே உண்மையென்று எடுத்துக்கொண்டு (முதல்வன் பாம்பைப் போல :-)) விவாதிப்பதைப் பற்றித்தான் சொல்லியுள்ளேன் என்று நினைக்கிறேன்.

Anonymous said...

'The Hindu' வை விடவா நக்கீரன் கேவலமாக நடந்துகொள்கிறது!?

நக்கீரனின் இந்த செய்திக் கட்டுரை+ கார்ட்டூனால் செய்தி விரைவாய்ப் பரவியது பலருக்கு பிடிக்கவில்லை போல. காசு பார்த்தாராம் அண்ணாச்சி! நக்கீரனின் மேல் எவ்வளவு வழக்குகள் இருக்கு தெரியுமா? அத்தனையும் அரசியல் காழ்ப்புணர்வால் தொடுக்கப்பட்டவை; வெடிகுண்டு வைத்திருந்தது தொடக்கம் நக்கீரன்-கோபாலை ஒரு பயங்கரவாதியாகச் சித்தரிக்கும் வழக்குகள். காசு பார்த்து தமிழினத் தலைவர் மாதிரி கள்ள ஓட்டா வாங்க முடியும்? ஏதோ கோர்ட்டுக்கும், வக்கீலுக்கும் அழத்தான் முடியும்!

said...

//
நக்கீரனின் இந்த செய்திக் கட்டுரை+ கார்ட்டூனால் செய்தி விரைவாய்ப் பரவியது பலருக்கு பிடிக்கவில்லை போல
//

இது கண்கூடாகத் தெரிகிறது:-)

said...

//'The Hindu' வை விடவா நக்கீரன் கேவலமாக நடந்துகொள்கிறது!? //
hindu பாதையில நக்கீரன் ஏன் போகனும்னுதான் கேள்வியே.

said...

அமல்,
எல்லோருக்கும் ஒரு ஆறுதல் தேவைதான். இல்லைன்னு சொல்லலைங்க. ஆனா அதை உண்மைன்னு நம்ப வைக்க எத்தனை பதிவுகள்?

said...

//
ILA said...
உண்மைய யாரு சொல்லுவாங்கன்னு ஒரு வார்த்தைய சொல்லிருங்க
//

ஆசையப்பாரு..உண்மை அதுக்குள்ள வெளியே வந்துடுமா(வாரா).
ஆனால் அதுவரை சசி சொல்வதே சரியென்று படுகிறது.
http://blog.tamilsasi.com/2009/05/ignore-rumours-about-prabhakaran.html

said...

இதுதாங்க சேதி வந்தவுடன் நான் போட்ட பதிவு

said...

//
ILA said...

இதுதாங்க சேதி வந்தவுடன் நான் போட்ட பதிவு
//

இளா,

அந்த பதிவை முன்பே படித்திருந்தேன். ஆனால் மறந்துவிட்டேன். அருமையான பதிவு அது! இவ்வளவு தெளிவாகவுள்ள நீங்கள் ஏன் அட்டைப்படத்தைப் பார்த்து கொந்தளித்தீர்கள்?
நீங்களாவது வெறும் படத்தைப்போட்டு பதிவிட்டிருந்தீர்கள். ஆனால் அந்தப்படத்தை வைத்து கூறுகெட்டத்தனமாக அலசி பதிவு போட்ட மற்ற சிலருக்காகத்தான் இந்த பதிவு என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

said...

//கொந்தளித்தீர்கள்? //
காரணம் தெரியலைங்க. அவுங்க பண்றாங்கன்னு இவுங்களும் பண்றாங்களேன்னு ஒரு ஆதங்கம்தான்.

Anonymous said...

என்னையா டெம்ப்ளேட்டு மாத்துங்கய்யா கண்ணு வலிக்குது படிக்கிறதுக்குள்ள

said...

@இளா,
//
அவுங்க பண்றாங்கன்னு இவுங்களும் பண்றாங்களேன்னு ஒரு ஆதங்கம்தான்.
//

இவர்கள் செய்ததுகூட ஒரு பதிலடியாகத்தான் பார்க்கிறேன்:-)

said...

/தவறாக எடுத்துக் கொள்ளமாட்டீர்கள் என்று நம்புகிறேன். நான் சொல்லவருவது, செய்தி உண்மையா பொய்யா என்பதல்ல. அந்த அட்டைப்படம் மிக மிக ஜனரஞ்சகமான ஒன்று! கடந்த ஒரு வாரகாலமாக மன உளைச்சலில் உள்ள என்னைப்போன்றோர் ரசிக்க, திருப்திப்பட மட்டுமே! அட்டைப்படத்தையே உண்மையென்று எடுத்துக்கொண்டு (முதல்வன் பாம்பைப் போல :-)) விவாதிப்பதைப் பற்றித்தான் சொல்லியுள்ளேன் என்று நினைக்கிறேன்.//

மிக சரி நானும் அன்று ஆனந்த பட்டேன்.. அது கிராப்கிஸ் என்பது ;) குழந்தைக்கு கூட தெரியும்

Anonymous said...

வா பகையே… வா…
வந்தெம் நெஞ்சேறி மிதி.
பூவாகவும் பிஞ்சாகவும் மரம் உலுப்பிக் கொட்டு.
வேரைத் தழித்து வீழ்த்து.
ஆயினும் அடிபணியோம் என்பதை மட்டும்
நினைவில் கொள்!”

ஆயிரம் வீரர்கள் தீயினில் போயினர்
ஆயினும் போரது நீறும், புலி
ஆடும் கொடி நிலம் ஆறும்.
பேயிருள் சூழ்ந்திடும் கானகம் மீதினில்
பாசறை ஆயிரம் தோன்றும், கருப்
பைகளும் ஆயுதம் ஏந்தும்.
மத்தளம், பேரிகை, கொட்டு புலிப்படை
மாபெரும் வெற்றிகள் சூடும், அந்த
சிங்கள கூட்டங்கள் ஓடும்.

Paaya Theriyum.Pathunga Theriyum.Payapada Theriyaathu.

Intha Ulagathil Suriyanai Thottavanum illai. Thalaivar Prabakaranai Suttavanum illai.

( Nile Raja )

Anonymous said...

நன்றி அமல் சார்.

இவனுங்க சரியான லூசுப் பயலுவ.. நக்கீரன் அந்த படம் தாங்க கிராபிக்ஸ் செய்தது என்று உள்ளே போட்டிருக்காங்களே அப்புறமும் ஏன் இப்படி லூசுத்தனமா பதிவு போடுறாங்க!

இன்டர்நெட்டில புத்தகத்தை படிக்கும் மேதாவிகளே கடையில அந்த நக்கீரன் பத்திரிகையை வாங்கி பாருங்க.. உள்ள அதை வடிவமைச்சது நக்கீரன்னு போட்டிருக்காங்க

Anonymous said...

nattula ivvalavu kulanthai pathivaalargalla?

Mathi

said...
This comment has been removed by the author.
Anonymous said...

Allow to pass the bedim with two backs casinos? earshot into communal remark this inexperienced [url=http://www.realcazinoz.com]casino[/url] exemplar and clutch up online casino games like slots, blackjack, roulette, baccarat and more at www.realcazinoz.com .
you can also find finished our idyll [url=http://freecasinogames2010.webs.com]casino[/url] make at http://freecasinogames2010.webs.com and glean work on lay lolly !
another personal [url=http://www.ttittancasino.com]casino spiele[/url] settle is www.ttittancasino.com , because german gamblers, ball-point pen in well-wishing online casino bonus.

Anonymous said...

top [url=http://www.c-online-casino.co.uk/]uk casino[/url] check the latest [url=http://www.realcazinoz.com/]free casino games[/url] free no set aside perk at the foremost [url=http://www.baywatchcasino.com/]no lay tip
[/url].