Thursday, May 7, 2009

உச்சத்தில் ஓர் ஆடு!
மே மாத PIT...

நம்ம PIT போட்டிகளுக்கு ஏற்கனவே எடுத்த படங்களை அனுப்பாமல் புதிதாக எடுத்து அனுப்புவதுதான் வழக்கம் (புதிதாக படம் எடுக்கும் உந்துதலுக்காகத்தான் போட்டியில் கலந்துகொள்வது என்றால் அது மிகையில்லை). ஆனால், வீட்டில் ஒரு புது வரவால், கடந்த மூன்று மாதங்களாக அது இயலவில்லை. சரி! இந்த மாதமாவது புதுப்படம் எடுத்தேயாகவேண்டுமென்று ஒரு உறுதியில் இருந்த நேரத்தில் குடுத்தாங்க ஒரு தலைப்பு (விலங்குகள்). ஆகா! சும்மாவே இந்த ஊர்ல ஒரு விலங்கையும் வெளியில் பார்க்கமுடியாது.(சமூக விலங்கே கார்லதான் போகும்). அப்படியே ஏதாவது ஒன்று தட்டுப்பட்டாலும் அவர்களுடைய ஓனரை கூட்டிகிட்டு நடைபழகும். எங்கேதான் போய் இவர்களைப் படம் எடுப்பது என்று எண்ணிக்கொண்டிருக்கையில், நம்ம An& போட்ட பதிவு நினைவுக்கு வர, அந்த இடத்தில் எடுத்த படங்கள்தான் இவை.

1. போட்டிக்கு
   உச்சத்தில் உறங்கும் ஆடு (Nubian Ibex)


2.உங்கள் பார்வைக்கு
   a. Markhor, Tadjik



   b. Double-Wattled Cassowary



   c. Meerkat


   d. Gerenuk




   e. வரிக்குதிரை






8 comments:

ஆ! இதழ்கள் said...

வாவ்... ஒவ்வொன்றும் போட்டியில் வெல்லத் தகுதியானவையே...

போட்டி படம் அருமை. texture பட்டையக் கிளப்புது.

வாழ்த்துக்கள் அமல்.

ஆ! இதழ்கள் said...

photography with the perspective of wildlifeக்காகவே அவர்கள் இடங்களை தயார் செய்தது போல் தெரிகிறதே. அப்படியா?

Amal said...

@ஆ! இதழ்கள்,
நன்றி ஆனந்த்! texture ஏதும் பயன்படுத்தவில்லை. அந்த இடமே அவ்வாறுதான் இருந்தது. உங்களுக்கு அந்த படம் பிடித்தால் அதற்கான பாராட்டு An&-க்கே சொந்தம்! இல்லையென்றால் அந்த இடத்திற்கே போய்யிருக்கமாட்டேன்.

Amal said...

//
ஆ! இதழ்கள் said...
photography with the perspective of wildlifeக்காகவே அவர்கள் இடங்களை தயார் செய்தது போல் தெரிகிறதே. அப்படியா?
//
அப்படியும் இருக்கலாம்:-)

KARTHIK said...

//வாவ்... ஒவ்வொன்றும் போட்டியில் வெல்லத் தகுதியானவையே...//

எல்லாமே அட்டகாசமா வந்திருக்குங்க அமல்.

Amal said...

நன்றி கார்த்திக்!

ராமலக்ஷ்மி said...

போட்டிப் படம் அருமை. ஆனால் அதனோடு மற்ற படங்களும் போட்டா போட்டியல்லவா போடுகின்றன? ஒவ்வொன்றும் simply superb.

[ஹி, இந்த முறை நான் லேட். பதிவை மிஸ் பண்ணிட்டேன். PiT-ல் entry பார்த்து இங்கே தேடி வந்தேன். ரசித்து மகிழ்ந்தேன். நன்றி:)]

Amal said...

நன்றி ராமலக்ஷ்மி!