Saturday, December 27, 2008

இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!!!

ஒவ்வொரு வருட முடிவிலும் இந்த கிறிஸ்துமஸ் திருநாள் சில வீடுகளை கனவுலகமாக மாற்றிவிடும் அதிசயத்தில் ஒரு சில...
Sunday, December 14, 2008

பின்தொடரும் நிழல் -
டிசம்பர் PIT...

கால்தடத்தின் துணையோடு பின்தொடரும் நிழல்...
Sunday, November 30, 2008

ஆர்கிட்களும் வண்ண மீன்களும்...

சென்ற மாதம் அருகிலுள்ள ஹண்டிங்டன் தாவரவியல் பூங்காவில் எடுத்தவை:
Monday, October 20, 2008

வோட்கா விளம்பரம் - ரெசிப்பி

சும்மா சொல்லக்கூடாதுங்க! இந்த மாதம் PIT-க்கு வந்த எல்லாப் படத்திலேயும் மக்கள் தூள் கிளப்பியிருந்தாங்க. அதனாலேயோ என்னவோ, போட்டியில் கலந்துகிட்ட நண்பர்களுக்கே சந்தேகம் சலங்கை கட்டி ஆட ஆரம்பிச்சிருச்சு:-)

இந்த மாத போட்டி அறிவிப்பு வந்த உடனேயே, நம்ம விளம்பர மாடல் மது பாட்டில்தான் என்று முடிவாகிருச்சு. இந்த வகை விளம்பரங்கள் அனைத்துமே diffused lighting பயன்படுத்தித்தான் எடுப்பாங்க, ஆனால் அந்த மாதிரி சமாச்சாரம் எதுவும் நம்ம கிட்ட இல்ல. என்ன பண்ணலாம்னு வலையில் மேய்ந்ததில் சில பயனுள்ள தகவல்கள் கிடைத்தது. கடைசியாக bounce lighting பயன்படுத்தலாம் என்று ஒரு வெள்ளை அட்டையை build-in flash-ற்கு முன்னால் 45 டிகிரி கோணத்தில் பிடித்து எடுத்ததால் lighting நன்றாகவே diffuse ஆகி வந்தது. அது மட்டும் இல்லாமல் அறையின் ஓர் மூலையில் படம் எடுத்ததால் சுவர்களில் ஒளி நன்றாக bounce ஆனது.

ஒரு மேசையை சுவற்றிலிருந்து 4 அடி தள்ளி நகர்த்தி, கறுப்பு நிற விரிப்பு விரித்து, அதன்மேல் ஒரு கண்ணாடி பலகையை வைத்து (அப்படித்தான் அனைத்துச்சாமான்களின் பிரதிபலிப்பு கீழே கிடைத்தது), மது பாட்டில், மார்ட்டினி க்ளாஸ், ஆரஞ்சு, செர்ரி, ஐஸ்கட்டிகள் எல்லாவற்றையும் நோக்கத்திற்கு பரப்பி வச்சாச்சு. கீழே இருக்கின்ற வரைபடத்தில் உள்ளதுபோல், கறுப்புப் பின்னணிக்கு இரண்டு கறுப்பு பனியன்களைத் தொங்கவிட்டாச்சு.இப்பப் படம் எடுத்துப் பார்த்தா ஏதோ குறையிற மாதிரி ஒரு எண்ணம். அதனால் செர்ரிய மேலே இருந்து தூக்கிப்போட ஆள் தயார் செய்து தூக்கிப்போட சொல்லிகிட்டே இருக்கவேண்டியதுதான். நீங்க செர்ரி நீரைத்தொடும் கணத்தில் க்ளிக்கிகிட்டே இருக்க வேண்டியதுதான். Multiple Exposure கூட பயன்படுத்தலாம். என்ன ஒரு விசயம்னா, நமக்கு வேண்டிய நீர்த்தெறிப்பு முதல் ஷாட்டிலயும் வரலாம் இல்ல கொஞ்சம் நேரங்கழிச்சும் வரலாம். எனக்கு ஒரு 4 மணி நேரம் கிடைத்து வந்தது:-)

அதில் சில.முதலில் வோட்கா என்றதும் அதன் நிறம் இல்லாத தன்மை நினைவிற்கு வந்ததால் வெள்ளைப் பின்னணியில் எடுக்கலாம் என்று ஆரம்பித்து கடைசியில் கறுப்புப் பின்னணியாகிவிட்டது. போட்டிக்கு அளித்த படம் எடுத்ததிலேயே கடைசி படம்.

வோட்கா என்றுமே என்னை கவர்ந்ததில்லை. அதற்குப் பல காரணங்கள். அதற்காக புதிதுபுதிதாக முயற்சி செய்வதற்கு அஞ்சுவதும் இல்லை:-) ஒரு வானொலி நிகழ்ச்சியில் இந்த வோட்காவைப் பற்றி கேள்விப்பட்டு வாங்கினேன். சும்மா சொல்லக்கூடாது. Greygoose-ஐ விட மிகச்சிறந்த வோட்கா இது என்பது என் கணிப்பு(இதையும் Greygooseதான் தயாரிக்கிறார்கள் என்று ஒரு வதந்தி உள்ளது). என்னைக்கேட்டால் 2 லார்ஜ் வோட்காவும் 4 ஐஸ்கட்டிகளுமே பொருத்தம் என்பேன். மத்தவங்க வேற மாதிரி முயற்சி செய்து மறக்காமல் பின்னூட்டத்தில் தெரிவிக்குமாறு வேண்டுகிறேன்:-)

Sunday, October 12, 2008

வோட்கா விளம்பரம் -
அக்டோபர் PIT போட்டிக்கு...1. போட்டிக்கான படம்.2. உங்கள் பார்வைக்கு...Monday, September 15, 2008

கட்டமைப்பு
PIT மெகா போட்டி


போட்டிக்கு...உங்கள் பார்வைக்கு...
Wednesday, July 16, 2008

ஜூலை இரவு கடற்கரை மற்றும் CVR

வேலைப்பளு அதிகமாகையால் இந்த மாதம் 14-ஆம் தேதி வரை PIT-க்காக படம் எடுக்கும் முடிவில் இல்லை, என்னால் முடியவும் இல்லை.
திடீரென்று 14-ஆம் தேதி இரவு ஒரு யோசனை! போட்டியில் வெற்றி பெறுவதா முக்கியம், கலந்து கொள்வதுதானே நமக்கு ஆனந்தம்.
அதுவும் நம்ம favourite nathas-ம் An&-ம் நடுவர்கள். எடுத்துதான் பார்ப்போமே என்று நம்ம வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள கடற்கரைக்குச் சென்று சில படங்கள் எடுத்தேன்.
அதுல ஒன்று இதோ!


ஏற்கனவே பல மாதங்களுக்கு முன் எடுத்த படத்தைப்போல் ஒரு நாலைந்து படங்கள் எடுத்த பின்பு ஒரு சந்தேகம். ஏனென்றால் நம்ம பரணீயும் மற்றும் சிலரும் அதே மாதிரி படங்களை இந்த மாதப் போட்டிக்கு அனுப்பி இருந்ததால், வேற மாதிரி முயற்சி பண்ணலாமே என்று எடுத்த படம் தான் இது!எடுத்து முடித்து வீட்டிற்கு வரும்போது இரவு 11:00 ஆகிவிட்டிருந்தது.
அடுத்த நாள், அலுவலகம் சென்றபிறகு நேரம் சென்றதே தெரியவில்லை. சட்டுனு நேரம் பார்த்தால் காலை 11:00 (இந்திய நேரம் இரவு 11:30).
ஆகா! நம்ம PIT மக்கள் 11:30(இங்கே)-யானால் கடையை மூடிறுவாங்களே என்று ஒரே ஓட்டம் வீட்டுக்கு.
வீட்டுக்குப் போய் படங்களைத் திறந்தால் ஏதோ குறைகிறமாதிரி ஒரு உணர்வு. என்ன பண்ணலாம் என்று வேகமாக (திரும்பி அலுவலகம் செல்லனும்ணே:-))யோசித்தால் இரு வாரங்களுக்கு முன் எடுத்த நிலவுப் படம் நினைவில் வந்தது. அதுதான் இது!

(வீட்டிலேயே இருந்து எடுத்ததால் ஒரு மரக்கிளை நிலவுக்குக் குறுக்கே செல்லுவது தெரியும்.).

இந்த நிலவை வெட்டி அந்தப் படத்தில் இணைக்கலாமே என்று யோசித்தால், அந்த அவசரத்தில் தொழில்நுட்பம் மண்டைக்குள்ள வரவேமாட்டேன் என்று ஒரே அடம்.
அதான் ஒரு அவசர அடியில் இரண்டையும் சேர்த்து போட்டிக்கு அனுப்பினேன், அதுவும் கொஞ்சம் தாமதமாக(15 நிமிடம் என்று நினைவு....ஆட்டையில் சேர்த்துக்கொண்டதற்கு PIT-க்கு நன்றி).
நம்ம கில்லாடிகள் nathas-ம் An&-ம் நடுவர்களாக உள்ள இந்த மாசமாப் பார்த்தா இப்படி நடக்கனும் என்று அப்போதே யோசித்தேன்.
அதுக்குள்ள நம்ம CVR வந்து பின்னூட்டிட்டாரு. அதனால், CVR-க்காக, போட்டிக்கு அனுப்பிய படத்தைக் கொஞ்சம் ஒளியேத்தி இதோ!போட்டிக்கு அனுப்பிய ஒரிஜினல் இது!

நான் இவ்வளவு எழுதுனதே இல்லை. வாய்ப்பளித்த CVR-க்கு நன்றி!!!.
பின்குறிப்பு: சொல்ல வந்த விஷயத்தயே சொல்லலயே!..அந்த நிலவு மட்டும் தான் சேர்த்தது:-)

Tuesday, July 15, 2008

இரவு நேரம்
PIT -- ஜூலை போட்டிக்குஇயற்கை ஒளியும் செயற்கை ஒளியும் சந்திக்கும் இடம்.
வேலைப்பளுவில் கடைசி நேரத்தில் இதுதான் எடுக்க முடிந்தது.

Monday, June 16, 2008

தியாகராசர் பொறியியல் கல்லூரி, மதுரை.
கல்லூரி நினைவுகள் எப்போதுமே அலாதியானவை. மேலே உள்ள படங்கள் ஒரு 13 அல்லது 14 வருடங்களுக்கு முன்பு கல்லூரிக்கு அருகில் உள்ள சிறிய குன்றின் (மயில்காடு?) மீதேறி எடுத்தது. அந்த காலத்தில் அவ்வளவு பச்சையாக இருக்கும். இப்ப எப்படினு தெரியல.
PIT ஜூன் மாத போட்டிக்கு பழைய Negative-களைத் தேடும்போது கிடைத்தது.
தியாகராசர் மக்கள் யாராவது இருக்கீங்களா?

Friday, June 13, 2008

அன்றாட வேலையினூடே ஒரு நாள்
(PIT ஜூன் மாத போட்டிக்கு)

1. நெல்மணிகளை உலர்த்தும் விவசாயிகள்...மேலே உள்ள படம் இந்த மாத போட்டிக்கு.
கீழே உள்ள படங்கள் உங்கள் பார்வைக்கு!

2. மரப்பெட்டிகளை பலகைகளாக்கும் வேலையில் தந்தையும் மகனும்...3. மகன் மட்டும் வேலை மும்முரத்தில்...4. பள்ளிக்கு அனுப்ப மகளைத் தயார் செய்யும் தாய்...
5. ஆடு மேய்த்துவிட்டு செல்லும் முதியவர்...6. விளையாட்டுப்பருவத்தில் சாப்பிடுவது கூட ஒரு வேலைதானே:-)இந்த முறை வேலைப்பளுவினால் ஒரு படம் கூட புதிதாக எடுக்க முடியவில்லை.
இந்த படங்கள் அனைத்தும் 12 வருடங்களுக்கு முன் Konica மற்றும் Agfa ஃபிலிமில் எடுத்தவை. கலர் ஃபிலிம் நாளடைவில் மங்கலாகும் என கேள்விப்பட்டிருந்தாலும், இந்த Negative-களைப் ப்ரிண்ட் போடும்போது கண்கூடாகப் பார்த்தேன். எடுத்த காலகட்டங்களில் அருமையாக இருந்த வண்ணங்கள் மற்றும் துல்லியம் இப்போது சுத்தமாகக் காணவில்லை. படங்களை Scan செய்து பார்த்தால் இன்னும் சுத்தம்.
உங்களிடம் ஏதேனும் நல்ல படங்கள் இருந்தால், இன்னும் மோசமாக ஆவதற்க்குள் உடனே ப்ரிண்ட் & Scan செய்து வைத்துக்கொள்வது உத்தமம்.

நன்றி: இந்தியாவிலேயே விட்டுட்டு வந்த Negative-களை, சென்ற வருடம் அமெரிக்கா வரும்போது எடுத்து வந்த பெற்றோருக்கு!
இல்லையென்றால் இந்த மாத PIT போட்டியை தவற விட்டு இருப்பேன்.

Thursday, May 29, 2008

வசந்தகால யோசெமெட்டீ (Yosemite in Spring)

அமெரிக்காவில் இது வசந்தகாலம்.
பருவகால மாற்றங்களைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும், படித்திருந்தாலும் இங்கு வந்த பிறகுதான் அதை ஓரளவுக்கு பார்க்க முடிகிறது. அமெரிக்கக் கிழக்கு மாகாணங்களில் உள்ளவர்களோடு ஒப்பிடுகையில், என்னைப்போல தென்கலிஃபோர்னியாவில் உள்ளவர்களுக்கு இந்த அனுபவம் கொஞ்சம் கம்மிதான்.

மழைக்காலமா..அங்கே இங்கே சில துளிகள்,
வசந்தகாலமா..பூங்காக்களில் ரோட்டோரங்களில் கொஞ்சம் அதிகமான பூக்கள்,
வெயில்காலங்களில் சற்றே அதிகமான சூடு,
பனிக்காலமா..அல்லது இலையுதிர்காலமா..சுத்தம்.
கிழக்கே உள்ளவர்களுக்கு இவை அனைத்துமே சற்று அதிகம்.

எல்லா பருவமாற்றத்தையும் கிழக்கேயும் வடக்கேயும் போய் பார்க்கிறோமே..இந்த வசந்தகாலத்தை அனுபவிக்க கலிஃபோர்னியாவில் ஒரு இடமுமா இல்லை என்று யோசித்தபோது தோன்றிய இடம் யோசெமெட்டீ (Yosemite). மே மாத கடைசிவாரம் இங்கே நீண்ட விடுமுறையாதலால், யோசெமெட்டீ செல்ல முடிவெடுத்து சென்று பார்த்தால்,... இடமாங்க அது?..எங்கு திரும்பினாலும், சின்ன வயசுல காலண்டர்ல, ஒரு இயற்கை அழகைப் பார்க்கும் போதெல்லாம்,இதெல்லாம் எங்க இருக்கு, எப்படி எடுத்தாங்கனு தோன்றுமே, அப்படி ஒரு இடம்.

பச்சைப்பசேல் புல்வெளிகள்.. ஊசியிலை மரக்காடுகள்.. பனிக்கூட்டம் முத்தமிட்டுச் செல்லும் செங்குத்தான பாறைகள்.. நீர்வீழ்ச்சிகள்.. சலசலத்துச் செல்லும் ஓடைகள்.. எல்லாமே அங்கே உள்ளது.

அதேமாதிரி, எங்க திரும்பினாலும் ஒரு பத்து பேரு முக்காலிய வச்சு படம் எடுத்துக்கிட்டே இருக்காங்க. நம்ம CVR, An&, nathas லாம் போனா முக்காலிய வச்சா நகர்த்த மாட்டாங்க:-). அப்பதான், ஒரு முக்காலிய எடுத்துட்டு வராம போயிட்டோமேனு வருத்தம். இருந்தாலும் ஒரளவு வந்த சில படங்கள்.

1. இது யோசெமெட்டீயில் நுழைந்த உடன் வரும் பூங்கா, பின்னணியில் யோசெமெட்டீ நீர்வீழ்ச்சி.2. BridalVeil நீர்வீழ்ச்சி3. BridalVeil நீர்வீழ்ச்சி விழுந்து, ஓடையாக மாறியபிறகு...4. BridalVeil நீர்வீழ்ச்சிக்கு எதிர்புறம், அங்கேயும் ஒரு நீர்வீழ்ச்சி!5. பல பூங்காக்களில் இதுவும் ஒன்று.6. ஓடைசெல்ல வாய்ப்பு கிடைத்தால் தவறவிடக்கூடாத இடம், யோசெமெட்டீ (Yosemite).

Friday, May 16, 2008

துளி...துளி...துளி...

PIT மே மாத போட்டிக்கு எடுக்கும்போது கிடைத்த சில படங்கள் உங்கள் பார்வைக்கு:-)