Monday, June 16, 2008

தியாகராசர் பொறியியல் கல்லூரி, மதுரை.

கல்லூரி நினைவுகள் எப்போதுமே அலாதியானவை. மேலே உள்ள படங்கள் ஒரு 13 அல்லது 14 வருடங்களுக்கு முன்பு கல்லூரிக்கு அருகில் உள்ள சிறிய குன்றின் (மயில்காடு?) மீதேறி எடுத்தது. அந்த காலத்தில் அவ்வளவு பச்சையாக இருக்கும். இப்ப எப்படினு தெரியல.
PIT ஜூன் மாத போட்டிக்கு பழைய Negative-களைத் தேடும்போது கிடைத்தது.
தியாகராசர் மக்கள் யாராவது இருக்கீங்களா?

26 comments:

யாத்ரீகன் said...

Senior !!!!!! :-)

super.. indha snaps yeduthathu neengala .. idhey maathiri padangalai college-la paartha niyabagam.

now its not that dense as in the picture, its more of empty land than the years we studied (6 years back)

குமரன் (Kumaran) said...

அமல்,

ஒரு மாதம் படித்ததை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்வீர்களா? 1989ல் ஒரே ஒரு மாதம் மட்டும் பி.எஸ்ஸி. அப்லைட் சயின்ஸ் படித்தேன். அப்புறம் கலசலிங்கத்தில் பி.இ. கிடைத்தவுடன் அங்கே போய்விட்டேன்.

Amal said...

வாங்க யாத்திரீகன்,
நீங்களும் TCE-யா! அநேகமா நாங்க வெளியே வந்த வருடம் நீங்க உள்ளே போயிருக்கீங்க போல:-)
இந்த படம் எல்லாம் நம்ம எடுத்ததுதான். உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி!!!. இப்ப எங்க இருக்கீங்க?

cheena (சீனா) said...

நண்பர்களே

நானும் அங்கு படித்தவன் தான் - 1967 - 1972

நினைவுகள் நெஞ்சில் அசை போடுகின்றன

வெற்றி பெற வாழ்த்துகள்

Amal said...

//
குமரன் (Kumaran) said...
அமல்,

ஒரு மாதம் படித்ததை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்வீர்களா? 1989ல் ஒரே ஒரு மாதம் மட்டும் பி.எஸ்ஸி. அப்லைட் சயின்ஸ் படித்தேன். அப்புறம் கலசலிங்கத்தில் பி.இ. கிடைத்தவுடன் அங்கே போய்விட்டேன்.

//

குமரன்,
எப்போதுமே பி.எஸ்ஸி. அப்லைட் சயின்ஸ்-ல வருட துவக்கத்தில் முதல் ஒரு மாதம் ஒரு batch, மீதி 3 வருடம் வேற batch.
ஏனென்றால் முதல் மாத batch, B.E கிடைத்து ஓடிவிடும். நானும் அந்த முதல் மாத batch தான்:-) என்ன, அதே கல்லூரியிலேயே தொடர்ந்தேன்.

Amal said...

//
cheena (சீனா) said...
நண்பர்களே

நானும் அங்கு படித்தவன் தான் - 1967 - 1972

நினைவுகள் நெஞ்சில் அசை போடுகின்றன

வெற்றி பெற வாழ்த்துகள்
//
சீனா அண்ணே!!! நீங்க படிச்சப்ப நானெல்லாம் பொறக்கவே இல்ல:-) இப்ப எங்க இருக்கீங்க?
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி!

Anonymous said...

Beautiful pictures of our college Amal. I did my masters between 1991 to 1994. Do we still have that vast agricultural field from Thiruparankundram to Pazhakanatham?

-Venkat

வால்பையன் said...

ஒரு மழை பொழுதில் அந்த பக்கமாக போனதாக ஞாபகம்.
சரியாக எங்கே இருக்கிறது என்று சொல்லமுடியுமா?
பசுமலை தாண்டியா?

வால்பையன்

களப்பிரர் - jp said...

//

ஒரு மாதம் படித்ததை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்வீர்களா? 1989ல் ஒரே ஒரு மாதம் மட்டும் பி.எஸ்ஸி. அப்லைட் சயின்ஸ் படித்தேன். அப்புறம் கலசலிங்கத்தில் பி.இ. கிடைத்தவுடன் அங்கே போய்விட்டேன்.//

இதுக்கு நானும் ரிப்பீட்டேய் !! நம்மப முடியவில்லை !!
1996-2000 கலசலிங்கத்தில் பி.இ.

மயிலாடுதுறை சிவா said...

புகைப் படத்திற்கு நன்றி

எனது தம்பி அங்கு 1989_1992 வரை அங்கு படித்தார். நான் பலமுறை அங்கு சென்று தங்கியுள்ளேன்.

விடுதியில் உணவும் மிக அருமையாக இருக்கும்!

மயிலாடுதுறை சிவா...

Amal said...

//
I did my masters between 1991 to 1994. Do we still have that vast agricultural field from Thiruparankundram to Pazhakanatham?

-Venkat
//
Venkat, I was there when you were there:-) I did my B.E between '92 and '96.

I don't know about agricultural field now. I heard that it is covered by real estate people:-(

Amal said...

//
வால்பையன் said...
ஒரு மழை பொழுதில் அந்த பக்கமாக போனதாக ஞாபகம்.
சரியாக எங்கே இருக்கிறது என்று சொல்லமுடியுமா?
பசுமலை தாண்டியா?
//

மழைக்கு எங்க கல்லூரிப்பக்கம் ஒதுங்குனேனு சொல்ல வரீங்களா:-)
பசுமலை தாண்டி மூலக்கடைக்கு அடுத்து வரும்.

//
களப்பிரர் said...
இதுக்கு நானும் ரிப்பீட்டேய் !! நம்மப முடியவில்லை !!
1996-2000 கலசலிங்கத்தில் பி.இ.
//

1996-ல் கலசலிங்கத்திற்கு ஒரு கல்ச்சுரல் ப்ரொக்ராமிற்காக வந்திருக்கேன். என் பள்ளி நண்பர்கள்
சிலர் அங்கே படித்தனர்.

இரண்டாம் சொக்கன்...! said...

ஹேய்..என்னையும் ஆட்டத்துல சேத்துக்கங்கப்பா...

நான் 1986-90 பேட்ச்.

கல்லூரி,எனக்கு இன்னொரு தாய்மடி...மெக்கானிக்கல் எஞ்ஜினியரிங்க்கோடு வாழ்க்கையில் எல்லாமே கற்றுத்தந்த தாய்மடி.

இன்றைக்கு நான் சாதித்திருக்கிற அத்தனையும் அந்த சூழல் தந்ததுதான்...

//மழைக்கு எங்க கல்லூரிப்பக்கம் ஒதுங்குனேனு சொல்ல வரீங்களா:-)
பசுமலை தாண்டி மூலக்கடைக்கு அடுத்து வரும்.//

நான் பள்ளி கூட்டத்தையே தாண்டினது இல்ல.
என்னுடைய இந்த பதிவ படிச்சா தெரியும்.
நானும் மதுரைக்காரன் என்பதால் கேட்டேன்

வால்பையன்

Shan Nalliah / GANDHIYIST said...

well done!

shan nalliah
sarvadesatamilercenter.blogspot.com

உண்மைத்தமிழன் said...

நான் படித்ததில்லை.. ஆனால் அந்தக் கல்லூரிக்கு பல முறை சென்றிருக்கிறேன். எனது பள்ளித் தோழர்கள் சிலர் அங்குதான் பி.இ. முடித்தார்கள். அவர்களைப் பார்ப்பதற்காக சென்றிருக்கிறேன்.. நான் அப்படியொரு முறை சென்றிருந்தபோது (1989 என்று நினைக்கிறேன்) மாணவர்களுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்தது.

திடீரென்று இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும், நான்காம் ஆண்டு மாணவர்களுக்கும் இடையில் பயங்கர கைகலப்பு, மோதல் நடந்து ரத்தக்களறியாகிவிட்டது. போலீஸ் வந்து (அப்போது திருப்பரங்குன்றம் டிஎஸ்பியாக வனிதா இருந்தார்) பெரும் பரபரப்பானது ஞாபகமிருக்கிறது.. நண்பர்கள் தயவால் அங்கே ஹாஸ்டலில்கூட சாப்பிட்டேன்..

அதன் பின்பு ஒரு வருடத்திற்கு எனது நண்பனின் அண்ணன் கடன் வாங்கிப் படித்ததற்கான தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்காக மாதாமாதம் சென்று வந்தேன்..

பழசை கிளறிவிட்டீர்கள் அமல்..

வினையூக்கி said...

நானும் நானும்... 1997-2001 பேட்ச்.. என்ன ஒரு அருமையான நாட்கள்.. மின்னொளி கிரிக்கெட் போட்டிகள்.. ஏறி இறங்கும் சாலைகள்.. மரத்தடி.. திரும்ப கல்லூரிக்குப்போக வேண்டும்.
----
<< இரண்டாம் சொக்கன்...! said...

ஹேய்..என்னையும் ஆட்டத்துல சேத்துக்கங்கப்பா...

நான் 1986-90 பேட்ச் >>
இரண்டாம் சொக்கன் நீங்க யாருன்னு நான் கண்டுபிடிச்சுட்டேன் இப்போ :))))))

Amal said...

//
மயிலாடுதுறை சிவா said...
புகைப் படத்திற்கு நன்றி

எனது தம்பி அங்கு 1989_1992 வரை அங்கு படித்தார். நான் பலமுறை அங்கு சென்று தங்கியுள்ளேன்.
//

நன்றி சிவா!!!
உங்க தம்பி படித்துமுடித்த வருடம் நான் சேர்ந்தேன்.

//
விடுதியில் உணவும் மிக அருமையாக இருக்கும்!
//

:-)

Amal said...

//
இரண்டாம் சொக்கன்...! said...
ஹேய்..என்னையும் ஆட்டத்துல சேத்துக்கங்கப்பா...

நான் 1986-90 பேட்ச்.
//

வாங்க சீனியர்!!!.

//
கல்லூரி,எனக்கு இன்னொரு தாய்மடி...மெக்கானிக்கல் எஞ்ஜினியரிங்க்கோடு வாழ்க்கையில் எல்லாமே கற்றுத்தந்த தாய்மடி.

இன்றைக்கு நான் சாதித்திருக்கிற அத்தனையும் அந்த சூழல் தந்ததுதான்...
//

ரிப்பீட்டு:-)
நானும் மெக்கானிக்கல் தான்.

Amal said...

//
வால்பையன் said...
ஒரு மழை பொழுதில் அந்த பக்கமாக போனதாக ஞாபகம்.
//

வால்பையன் என்ற பெயரைப் பார்த்தவுடன், சும்மா கலாய்க்கிறதுக்குதான் கேட்டீங்கனு நினைத்தேன்.

//
நான் பள்ளி கூட்டத்தையே தாண்டினது இல்ல.
என்னுடைய இந்த பதிவ படிச்சா தெரியும்.
நானும் மதுரைக்காரன் என்பதால் கேட்டேன்
//

உங்கள் பதிவைப் படித்தேன். 100% உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன்.
நீங்க மதுரையில் எங்கே இருக்கீங்க?

Amal said...

//
திடீரென்று இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும், நான்காம் ஆண்டு மாணவர்களுக்கும் இடையில் பயங்கர கைகலப்பு, மோதல் நடந்து ரத்தக்களறியாகிவிட்டது. போலீஸ் வந்து (அப்போது திருப்பரங்குன்றம் டிஎஸ்பியாக வனிதா இருந்தார்) பெரும் பரபரப்பானது ஞாபகமிருக்கிறது.. நண்பர்கள் தயவால் அங்கே ஹாஸ்டலில்கூட சாப்பிட்டேன்..
//

உண்மைத் தமிழன்!
சண்டைனா ரத்தம் வரத்தானே செய்யும். ரத்தக்களரி ஆகாத சண்டை உலகத்துல எங்க இருக்கு:-)
சண்டை வருடத்திற்கு ஒரு முறை கட்டாயம் வரும். போகும். டிஎஸ்பி வனிதாவும் வருவாங்க..போவாங்க...

வருகைக்கு நன்றி!!!

Amal said...

நன்றி Shan Nalliah!!!

//
வினையூக்கி said...
நானும் நானும்... 1997-2001 பேட்ச்.. என்ன ஒரு அருமையான நாட்கள்.. மின்னொளி கிரிக்கெட் போட்டிகள்.. ஏறி இறங்கும் சாலைகள்.. மரத்தடி.. திரும்ப கல்லூரிக்குப்போக வேண்டும்.
//

வாங்க வினையூக்கி!!!..நிச்சயமாக அருமையான நாட்கள்..
நிறைய பேருக்கு தியாகராசர் கல்லூரியுடன் தொடர்பிருக்கும் போல இருக்கு. இதுவரைக்கும்

யாத்திரீகன்
குமரன்
cheena (சீனா)
களப்பிரர்
மயிலாடுதுறை சிவா
Venkat
இரண்டாம் சொக்கன்
வால்பையன்
உண்மைத் தமிழன்
வினையூக்கி

இன்னும் யாராவது இருக்கீங்களா?

வால்பையன் said...

//நீங்க மதுரையில் எங்கே இருக்கீங்க? //

இப்போ ஈரோட்டில் இருக்கிறேன்.
இரண்டு மாதத்திற்கு ஒரு தடவை மதுரை வருவேன்,
எனது அலைபேசி நம்பர் வேண்டுமா
எனது இந்த பிளாக்கில் கிடைக்கும்

வால்பையன்

கப்பி | Kappi said...

//இன்னும் யாராவது இருக்கீங்களா?//

என்னையும் ஆட்டையில சேர்த்துக்கோங்க சீனியர் :))