பருவகால மாற்றங்களைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும், படித்திருந்தாலும் இங்கு வந்த பிறகுதான் அதை ஓரளவுக்கு பார்க்க முடிகிறது. அமெரிக்கக் கிழக்கு மாகாணங்களில் உள்ளவர்களோடு ஒப்பிடுகையில், என்னைப்போல தென்கலிஃபோர்னியாவில் உள்ளவர்களுக்கு இந்த அனுபவம் கொஞ்சம் கம்மிதான்.
மழைக்காலமா..அங்கே இங்கே சில துளிகள்,
வசந்தகாலமா..பூங்காக்களில் ரோட்டோரங்களில் கொஞ்சம் அதிகமான பூக்கள்,
வெயில்காலங்களில் சற்றே அதிகமான சூடு,
பனிக்காலமா..அல்லது இலையுதிர்காலமா..சுத்தம்.
கிழக்கே உள்ளவர்களுக்கு இவை அனைத்துமே சற்று அதிகம்.
எல்லா பருவமாற்றத்தையும் கிழக்கேயும் வடக்கேயும் போய் பார்க்கிறோமே..இந்த வசந்தகாலத்தை அனுபவிக்க கலிஃபோர்னியாவில் ஒரு இடமுமா இல்லை என்று யோசித்தபோது தோன்றிய இடம் யோசெமெட்டீ (Yosemite). மே மாத கடைசிவாரம் இங்கே நீண்ட விடுமுறையாதலால், யோசெமெட்டீ செல்ல முடிவெடுத்து சென்று பார்த்தால்,... இடமாங்க அது?..எங்கு திரும்பினாலும், சின்ன வயசுல காலண்டர்ல, ஒரு இயற்கை அழகைப் பார்க்கும் போதெல்லாம்,இதெல்லாம் எங்க இருக்கு, எப்படி எடுத்தாங்கனு தோன்றுமே, அப்படி ஒரு இடம்.
பச்சைப்பசேல் புல்வெளிகள்.. ஊசியிலை மரக்காடுகள்.. பனிக்கூட்டம் முத்தமிட்டுச் செல்லும் செங்குத்தான பாறைகள்.. நீர்வீழ்ச்சிகள்.. சலசலத்துச் செல்லும் ஓடைகள்.. எல்லாமே அங்கே உள்ளது.
அதேமாதிரி, எங்க திரும்பினாலும் ஒரு பத்து பேரு முக்காலிய வச்சு படம் எடுத்துக்கிட்டே இருக்காங்க. நம்ம CVR, An&, nathas லாம் போனா முக்காலிய வச்சா நகர்த்த மாட்டாங்க:-). அப்பதான், ஒரு முக்காலிய எடுத்துட்டு வராம போயிட்டோமேனு வருத்தம். இருந்தாலும் ஒரளவு வந்த சில படங்கள்.
1. இது யோசெமெட்டீயில் நுழைந்த உடன் வரும் பூங்கா, பின்னணியில் யோசெமெட்டீ நீர்வீழ்ச்சி.

2. BridalVeil நீர்வீழ்ச்சி

3. BridalVeil நீர்வீழ்ச்சி விழுந்து, ஓடையாக மாறியபிறகு...

4. BridalVeil நீர்வீழ்ச்சிக்கு எதிர்புறம், அங்கேயும் ஒரு நீர்வீழ்ச்சி!

5. பல பூங்காக்களில் இதுவும் ஒன்று.

6. ஓடை

செல்ல வாய்ப்பு கிடைத்தால் தவறவிடக்கூடாத இடம், யோசெமெட்டீ (Yosemite).